வெள்ளி, 6 மே, 2022

383. (916) விருட்சமாய் மொழிபெயர்க்கும்

 



   




        விருட்சமாய் மொழிபெயர்க்கும்


விரிபுவி   உலகில்  விரல்கள்  வடிக்கும்

வித்தகமான எண்ண விதையை வியனுலகில்

விருட்சமாய்  மொழி பெயர்த்து  விரிக்கும்

விந்தை கவிதை!   வேறுபாடின்றி விகசிக்கும்

வெறும் புள்ளிகள் விலகாது  கோடாதலாக

வெளிப்படையாய்  வெளிச்சமிடும் வர்த்தகமாகும் கவிதை

00

கவிதையில் ஈரமாகிக் கருத்தால் அலசுங்கள்

கவித்துவம்  வார்த்தைகளில்  குவியும்  பேரழகு.

குவியும் பாடுபொருளில் குவலயம்  சீராகலாம்.

கரும்பு இனிப்பாய்க் கவிவரி இனித்திட

கண்ணிய வரிகளும் காவியமாய் தீபமிட

கீர்த்தனமாய் அறநெறிகள் காப்பியமாய் ஆகட்டும்.

00

தூய    மனமும் துணிந்த செயலும்

தூரிகையாய் வரையும் தமிழும் போதும்.

தூறல் மழையாய் தூசி விலக்கி

தூய்மை தரும் தாய்த்தமிழ்

தூண்டிலாகத் தமிழ் தூதன் தூது சொல்ல

தூபமாய்  மனதை எழுப்பிடட்|டும் இன்கவிதை.


கவியரசி  வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 6;5;2022.


1 கருத்து:

  1. 6-5-2022 c0mments.....

    லோக சுந்தரம்
    நன்று 👌நண்பியே

    Vetha Langathilakam
    Loga Sundharam mikka mkilchy Nanry urave.....

    Vetha Langathilakam
    vinthy...nalama...nanry.....

    Sarala Vimalarajah
    அருமை அக்கா

    Vetha Langathilakam
    Sarala Vimalarajah
    பேரன்புடன் மிக மகிழ்ச்சி சகோதரி
    நன்றி

    Vetha Langathilakam
    Gandhimathi Selvarathinam
    Admin
    Considering parenthood… அருமை
    6-5-2022
    Vetha Langathilakam
    Author
    Gandhimathi Selvarathinam பேரன்புடன் மிக மகிழ்ச்சி சகோதரி
    நன்றி

    Subi Narendran
    செம்மையான தமிழை வரிகளில் ரசிக்க முடிகிறது. அருமையான கவிதை.

    Vetha Langathilakam
    Subi Narendran mikka mkilchchy nanry Subi....

    Ampalavan Puvanenthiran
    GIF
    photo wish
    Vetha Langathilakam
    Ampalavan Puvanenthiran

    சர்மினி சிறிகாந்தன்
    வரிகள் பேரழகு ❤️
    அருமை 👌

    Vetha Langathilakam
    Srikanthan Sarmini
    No photo description available.

    Paval Rajadurai

    Vetha Langathilakam
    Paval Rajadurai mikka nanry

    Vetha Langathilakam
    பால கன்
    Admin
    அருமை
    7-5-2022
    Vetha Langathilakam
    Author
    பால கன் Mika mkilchchy bro..Nanry.

    Vetha Langathilakam
    குயிலோசை
    Admin
    Nice 👍
    7-5-2022
    Vetha Langathilakam
    Author
    குயிலோசை Thank you

    Nagalingham Gajendiran
    சிறப்பு. வாழ்த்துகள்.
    GIF

    Vetha Langathilakam
    Nagalingham Gajendiran anpu nanry makilchchy..

    Vetha Langathilakam
    Kalaivani Gunabalan
    அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்களும்.
    11-5-2022…Vetha Langathilakam
    Author
    Kalaivani Gunabalan mkilchchy anpudan

    Vetha Langathilakam
    Kalaivani Gunabalan
    Vetha Langathilakam மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு