மனிதர்கள் மிக மாறிவிட்டார்கள்.
00
ஏமாற்றாதே.... ஏமாற்றாதே என்பது
ஏமாறாதே என்பதற்கும் இரு பக்கமும் பொருந்தும்.
தர்மம் என்றும் காக்கும் இவை பழைய சொல் வழக்கு ஆனாலும்
இன்று தூக்கி எறிபவர் பலர்.
என்றும் பழைய நீதிமுறை நம்மைக் காக்கும்.
00
நேசம் பாசம் தூரவாகிறது. ஓன்றில் தானே மாறுகிறது அல்லது தம்பதிகளாக ஒருவரை ஒருவர் கட்டுப் படுத்துதலிலும் மாறுகிறது
00
பணம் மிகப் பிரமாதமாய் வேலை செய்கிறது. யாரையும் சார்ந்து வாழும் தேவையற்ற சமூக அமைப்பு வல்லமை தருகிறது அதனால் யாரையும் கணக்கெடுக்காது வாழலாம். நொண்டும் போது தானே கைத்தடி தேவைப்படுகிறது.
00
பெரியவரை மதித்தல் எகிறுகிறது. நலம் விசாரித்தல் நாறிப்போகிறது. நெருங்கி வந்து நலம் விசாரித்தலால் நாம் குறைந்துவிடப் போவதில்லை. நான் பெரியவன் எனும் தலைப் பாரம் குறைக்கலாம்.
00
29-8-2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக