செவ்வாய், 5 மே, 2020

273. (836 ) (ஊடகம்) வாழ்வே கலை






வாழ்வே கலை

00
கலைகள் பின்னிப் பிணைந்த
விலையற்ற ஆக்கத் தொழிற்பாடுகள்
அலையலையாய் மனதில் ஆனந்தத் தேன்
உலையேற்றும்! ஆக்க உணர்வைக்
குலையாய்க் கொண்டு வரும்.
தொலைத்திடும் விடமான சோம்பலை
மலையான  துன்பத்தையும்   வேகமாய்க்
கொலைத்திடும் மானிட வெற்றிக்கு.
00

சிகரத்தில் நிற்பவருக்குத் தன்னிலை
சுற்றியிருப்பவர்களாற் தான் அறிய முடியும்.
உறக்கத்தின் கைப்பொருள் இருள்
வாழ்வின் கைப்பொருள் கலை.
எதிரிகள் நம்மேணிப் படிகள்
அவர்கள் விடும்  சவால்கள் நம்மைத்
தூக்கி நிறுத்தும் நெம்புகோல்கள்.
தடைகள் நம் சாதளை வெற்றிப்படிகள்.
00
குன்றிலிட்ட தீபமாகு! குணத்தில் தாழ்ந்திடாதே!
நன்றியுள்ள மனமே உயர வாழ்த்திடும்
கன்றிடாது மனதைக் கலகலப்பாக ஆழ்த்திடு!
வென்றிடலாம் உலகில் வெளிச்சம் சூழ்ந்திட!
00
ஓடி ஓடித் தழுவுமலை
நாடியும் ஏற்காத போதும்
தேடித் தேடி வருகிறதே பூமியை
வாடித் தளராதோ கோபத்தில்!
வாடினும் தூக்கம் வராவிடிலும்
தேடி உருள்வதேனோ நித்திரைக்காகவோ!---

 12-2-2020










11 கருத்துகள்:

  1. Rajarajan:- வாழ்க வளமுடன்
    5-5-2020


    Vetha Langathilakam :- அதே போல நீடு வாழ்க வளமுடன்.
    ·

    Rajarajan:- Vetha Langathilakam நன்றி
    5-5-2020

    பதிலளிநீக்கு
  2. Subi Narendran :- வாழும் கலையை வாழ்வே கலையாக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
    5-5-2020

    Vetha Langathilakam :- அப்படிச் சொல்ல இப்படியான உங்களைப் போன்ற தமிழ் நேசர்கள் ஆதரவு தேவை.
    இந்த ஆதரவிற்கு மனமார்ந்த நேசங்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  3. Ampalavan Puvanenthiran:-
    பயிலவுவும் பயிற்றுவிக்கவும்
    வாழ்வே ஆசானாய்
    வாழ்க்கையே பாடங்களாய் மாந்தரைப் புடம்போடுகின்றன..… See M
    5-5-2020
    Vetha Langathilakam:-
    அன்புடன் மகிழ்ச்சி சகோதரா.
    இறையாசி நிறையட்டும்.
    5-5-2029
    Ampalavan Puvanenthiran:-
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. Jasmin Kennedy :- அழகான வரிகள்
    6-5-2020
    Vetha Langathilakam :- பழகிய தமிழில் பயின்று பயின்று
    படியேறும் பாணி இது
    மகிழ்ச்சி சகோதரி நன்றி

    பதிலளிநீக்கு
  5. Sivaneswary Sivarasah:-
    அருமையான பதிவு
    10-5-2020
    Vetha Langathilakam:-
    இந்த ஆதரவிற்கு மனமார்ந்த நேசங்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு

  6. Rasamalar Jeyam :- அழகான வரிகள் பாராட்டுக்கள்

    Love

    Vetha Langathilakam :- சகோதரி தாங்கள் கருத்துத் தருகிறீர்கள்.
    மிக மகிழ்வும் ஊக்கவிப்பையும் இது தருகிறது.
    கண்டும் காணாமல் செல்வோர் பலர்.
    உலகே மாறுகிறது...நன்றி..நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rasamalar Jeyam :- திறமைசாலிகளை ஊக்குவிப்பதிலும் கருத்துகளைப்பகிரவதும் மகிழ்சியேதான் 11-5-2020

      நீக்கு
  7. Raji Krish :- பதிவு சூப்பர் மா வேதா. 🙏

    Like
    11-5-2020
    Vetha Langathilakam :- சகோதரி தாங்கள் கருத்துத் தருகிறீர்கள்.
    மிக மகிழ்வும் ஊக்கவிப்பையும் இது தருகிறது.
    கண்டும் காணாமல் செல்வோர் பலர்.
    உலகே மாறுகிறது...நன்றி..நன்றி...

    பதிலளிநீக்கு

  8. Kugananthaluxmy Ganesan ;. வாழ்வே கலை... அருமையான தன்னம்பிக்கை கவி வரிகள். வாழ்த்துகள் சகோதரி.
    11-5-2020

    Love

    Vetha Langathilakam:- இந்த ஆதரவிற்கு மனமார்ந்த நேசங்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு

  9. Sujatha Anton :- எதிரிகள் நம்மேணிப் படிகள்
    அவர்கள் விடும் சவால்கள் நம்மைத்
    தூக்கி நிறுத்தும் நெம்புகோல்கள்.
    அருமை வரிகள். வாழ்க தமிழ்.!!!
    12-5-2020

    Love

    Vetha Langathilakam:- ஆதரவிற்கு மனமார்ந்த நேசங்கள் சகோதரி.Sujatha Anton.

    Like

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு