வெள்ளி, 29 மே, 2020

277. (840 ). சமூகத் தளங்கள்.







சமூகத் தளங்கள்.


டிக்டாக், யூரியூப் முகநூல்
முட்டையிடும் பொன் வாத்தாம்!
முதலான மானுட கௌரவத்தை
முளைத்தானியமாம் சுய திறமைகளை
முன்றிலுக்கு அழைத்துக் கேவலமாக்குகிறார்.

முன்மாதிரி அழகர் என்று
முகம் கை கால்களை
முறித்துத் தம் தரமழிக்கிறார்.
முறுவல் மறந்தவர் தற்கொலைக்கிறார்.
முறையீடு தற்கொலைகள் ஏராளமேராளம்

மூளையைப் பாவித்துக் கண்ணியம்
மூழ்காது கவனி!   முன்னேற்றம் 
மூலமந்திரப் பணமென்று பல்லிளித்தல்
மூடமதியாளர் நாடகமன்றோ இது
மூதறிவால் பெருமை காத்தலுத்தமம்

நல்லதமிழ் கசந்து  போனதுவோ!
அல்லலுடை சினிமாப் பைத்தியமோ  இது
அன்றி வறுமை வதைக்கிறதோ!
பாழான வழிகளிற் புதைவதேனோ!

29-5-2020




5 கருத்துகள்:

  1. சிறந்த விழிப்புணர்வு கவிதை. Tiktok காலத்தின் வரவுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. மிக மகிழ்வு கௌசியின்கருத்திற்கு
      அன்புடன் நன்றி உரித்தாகுக.


      நீக்கு


  2. Sarala Vimalarajah:- அருமையான வரிகள் அக்கா
    31-5-2020
    Love

    Vetha Langathilakam:-
    மிக மகிழ்வு சரளாவின் கருத்திற்கு
    ஆழ்ந்த அன்புடன் வேதா.

    பதிலளிநீக்கு
  3. சிந்தியா சிந்தி:-
    சிறப்பு
    1-6-2020

    Vetha Langathilakam:-
    மிக மகிழ்வு சிந்தியாவின் கருத்திற்கு
    ஆழ்ந்த அன்புடன் வேதா.

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு