ஞாயிறு, 24 மே, 2020

276. (839 ) radio - பாராட்டுதல







https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10158681251443984/



 (வானொலி- அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.)


பாராட்டுதல்

(ஓராட்டும் - ஆராட்டும் - தாலாட்டுதல்.
ஆதனம் - சொத்து.  வேதனம் - பொன், வேதம்.
சேதனம் - அறிவு)
1பாராட்டில் சீராடாதார் யார்!
ஓராட்டும் முத்தம், முதுகுத் தட்டு,
தேனாட்டும் புன்னகை, கைகுலுக்கல்,
ஆராட்டும் அன்பு வார்த்தைகளும்!

ஆதன மனம் தேவை பாராட்ட!
சாதனைப் படியிது, கிரியா ஊக்கி!
சேதனமான உயர்வு பாராட்டுதலால் நிகழும்
வேதனம் ஒரு பாராட்டு!   மிகையல்ல!

தன்னம்பிக்கை வெகு தரமாக ஊன்றப்படும்.
சின்னச்     செயலின் பாராட்டுக்   கூட
பென்னம் பெரிய சாதனையின் வித்தாகும்!
என்ன தயக்கம் பாராட்ட ! பாராட்டுங்கள்!

பாராட்டுதல் பாதுகாப்பு உணர்வு தரும்
பாராட்டுதல்  பலர் முன்னிலையிலாகட்டும்! குறையை
பாசமுடன்  எடுத்து ஓதுங்கள் தனிமையில்.!
வேரோடட்டும் பாராட்டும் நற்பண்பு!

உங்களை அங்கீகாரப் படுத்தும் பாராட்டு!
நீங்கள் சமூகத்தால் கவனிக்கப் படுவீர்கள்!
பொங்காத பாராட்டால் அறிவும், ஆற்றலும்
மங்கிட   இடமுண்டு! நன்றே பாராட்டுங்கள்!

நன்றி மறவாமை, இனியவை கூறல்,
அன்புடைமை, இன்னா கூறாமை
இன்ன    பல   நற்பண்பு பாராட்டும்
நன்   மனம்   வளர்க்கும்! பாராட்டுங்கள்!


22-5-2020







10 கருத்துகள்:

  1. கவிதா கவி:-
    வாழ்த்துக்கள்


    24-5-2020

    Vetha Langathilakam:-
    தங்கள் கம்பீரக் குரலில் கவிதை ஆகா! மிக அருமை.
    விளக்கங்களும் பிரமாதம். மிக மகிழ்வு சௌந்தரி!
    தங்களுக்கு நிறை வாழ்த்துகள்.
    இறையாசியும் நிறையட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. சிந்தியா சிந்தி:-
    Vetha Langathilakam அழகிய வரிகள் இனிய வாழ்த்துகள்

    Vetha Langathilakam:-
    அன்புடன் மகிழ்வு உறவே
    24-5-2020

    பதிலளிநீக்கு
  3. Jasmin Kennedy:_
    அழகான வரிகள்
    வாழ்த்துகள்
    24-5-2020
    Vetha Langathilakam:-
    அன்புடன் மகிழ்வு உறவே


    Mariathas Gnanapragasam:-
    அருமை..வாழ்த்துக்கள்
    24-5-2020
    Vetha Langathilakam:-
    அன்புடன் மகிழ்வு உறவே
    24-5-2020

    பதிலளிநீக்கு
  4. Lakshman Thirunavukkarasu:-
    வாழ்த்துக்கள் கவியே
    24-5-2020
    Vetha Langathilakam:-
    அன்புடன் மகிழ்வு உறவே

    Inuvaiur Sakthythasan: photo wish. Suuper
    24-5-2020
    Vetha Langathilakam:-
    photo thanks

    பதிலளிநீக்கு
  5. சிந்தியா சிந்தி:- Vetha Langathilakam அழகு வரிகள் 22-5-2020


    Sothi Manikkam:- Vetha Langathilakam
    சேதனமான உயர்வு பாராட்டுதலால் நிகழும்.
    மெத்தப் பெரிய உண்மை.
    வாழ்த்துகள்! 22-5-2020

    பதிலளிநீக்கு
  6. Sivaneswary Sivarasah :- இலகுவான மொழிநடையில் அழகான பாராட்டு. வாழ்த்துகள்
    Love
    24-5-2020
    Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வு உறவே sivanes.....
    24-5-2020
    Like

    Nagalingham Gajendiran நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    Vetha: photo Thanks....24-5-2020

    பதிலளிநீக்கு

  7. Manjula Kulendranathan :அழகான தமிழ் கவிதை உங்கள் கவிதை க்கு எங்கள் பாராட்டு
    24-5-2020
    Love

    Vetha Langathilakam:- அன்புடன் மகிழ்வு உறவே Manju.
    24-5-2020
    Like

    பதிலளிநீக்கு

  8. Sothi Manikkam :- ஒரு சுகம் தரும் கவிதை
    இலகு நடையில்
    எழிலான பாராட்டு!
    வாழ்த்துகள்!
    24-5-2020
    Love

    Vetha Langathilakam :- தங்கள் இரசனைக்கு மகிழ்வு சகோதரா.
    அன்புடன் நன்றியும் உரித்தாகுக.
    Like
    24-5-2020

    பதிலளிநீக்கு
  9. சௌந்தரி கணேசன்:- வானதி அருமையான ஆழமான கவிதை, enjoy reading 24-6-2020

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Vetha Langathilakam:- மிக மகிழ்வும், நெகிழ்ச்சியும் சகோதரி.

      நீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு