செவ்வாய், 28 ஜூன், 2022

385. (918) நல்ல மனம் நல்லதையே செய்யும்.

 







நல்ல மனம் நல்லதையே செய்யும்



தனமான தாய்நில நினைவுகளால் 

மனம் நிறைந்து கிடக்கிறது

இனமென்று உதவி பெற்றவர்கள்

மனதோடு பணத்தைத்  திருப்பிட்டால் 

கனமான வேலைகளை முடித்திடலாம்.

00

சுத்தமாய்ப் பணம் பற்றாக்குறை

எத்தனை நல்ல காரியங்கள்

மொத்தமாய்க் காத்திருக்கிறது முடித்திட

கொடுத்த நிதியைத் திரும்பக் கேட்டால்

பித்துப் பிடித்த  மாதிரியாகிறார்

00

நல்ல பெற்றோருக்குப் பிறந்த

நன்றியுடைய  மனிதப் பிறவி

நாணயத்தை மறப்பது நன்றன்று

நாசபுத்தி மறந்து நாம்

நிறைமாந்தராய் நிலைப்பது  நன்மை

00

-28-6-2022


494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...