தோற்றால் வரும் ஏமாற்றம்
எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம்
எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன்
ஏமாற்றம் உயர்விற்குப் படிக்கட்டு
ஏற்றம் தரும் சுனாமி
நிலைகுலைக்கும் முயற்சி இன்றேல்
மலையான இறைநம்பிக்கை கைத்தடி.
தொலையாத் துணிவு, பொறுமை, காலம்
கலைத்திடும் ஏமாற்றத்தை! நம்பலாம்!
ஏமாற்றம், வஞ்சகம், மனக்கலக்கம்
ஏமாறாதோர் எவருள்ளார் புவியில்
ஊமாண்டியாய் (பூச்சாண்டி) ஊமைக் காயமாக்கும்
கோமா நிலைக்கும் தள்ளிடும்.
நினைப்பது நடக்காவிடில் ஏமாற்றம்
நினைப்பே இல்லாவிடில் சுயமாக
வினைப்பயனாய் நடக்கட்டும்! இவ்வெண்ணம்
நனைப்பது எவரோ சுகப்படுவார்.
ஏமாற்றுபவன் மாறிட ஏங்காதே!
ஏமாறும் நீ மாறிவிடு!
ஓமாக்கினியால் (வேள்வித்தீ) இதயத்தை உருக்காதே!
கோமானாகு! ஏமாற்றுவோனை மறந்திடு!
பற்றற்று வாழத் துறவியாகணும்
பற்று தானே இன்பவாழ்வு!
சுற்றிவரச் சார்ர்ந்திடாது மனம்போல
அற்புதமாய் வாழு! அடிமையாகாதே!
00
ஏமாற்றுவோன் மாற மாட்டான்
ஏமாற்றிப் பழகியவன் அவன்.
ஏமாற்றுதல் அவனுக்கு ஆனந்தம்!
ஏமாற்றமெனும் வஞ்சகத்தால் அடுத்தவனை
ஏமாளியாக்குதல்அவனுக்கு இன்பம்.
ஏமிலாந்துவோர் உலகில் பலர்.
00
வேதா. இலங்காதிலகம் - டென்மார்க் 7-5-2021
00