புதன், 20 செப்டம்பர், 2023

413..(946) கடலோடு பேச்சா!

 





கடலோடு பேச்சா!


கடலோடு பேசுகிறானா! அங்கும் மௌனமா!

அட தனிமையா!  அடக்கும் கட்டுப்பாடா!

இடக்கு முடக்கான வாழ்க்கைத் துணையா!

இடமில்லையா உன் உறவுகளுடன் உறவாட!

00

முகநூலிலும் உறவை முகர்ந்திட முடியாதா!

அகமகிழ வாட்ஸ்அப்  உறவு இல்லையா!

அன்பு பொக்கிசம்! கொண்டாடத் தெரியாதா!

அன்பை உணரத் தெரியாத பிறப்பா!

00

கடற்   காற்றாய்த் தழுவிய அன்பு

தடமிட்டது    உண்மையாய்   உறுதியாய் அன்று

விடமாகி வேசமானதா காலூன்றியதால் இன்று!

கடந்திட்ட    தனிமைத் தீவா  இது!

00

அன்பு இவ்வளவு தானா! வேடம்

அருமையாய் கலைகிறதா! சிகரம் ஏறாதா!

பருமனாகாதா பந்தம்! மனநோயை மாற்று!

பெருமையாக மாற்று!  வழமையை மாற்று!

00

இன்ப  உணர்வு  இதம் தரும்

இந்த வெள்ளிகளுடன் உறவாடு! அது

சொந்தங்கள் போன்ற சுகம் தரும்!

பந்தமென மண்ணை அளைந்து மகிழு!

00

வேதா. இலங்காதிலகம்  தென்மார்க்   20-9-2023


1 கருத்து:

  1. சொந்தங்கள் போன்ற சுகம் தரும்!

    பந்தமென மண்ணை அளைந்து மகிழு!--மண் உணர்வுகளோடு உறையும் உள்ளத்திலிருந்து உதிரும் உயிர் மூச்சுகள் கவியாக ..... வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...