செவ்வாய், 18 ஜூன், 2024

430 - 964 ( நெஞ்சம் மகிழும் நிதம்)

 


              






நெஞ்சம் மகிழும் நிதம்


வஞ்சகமற்ற மனிதர்கள் பேசும்
கொஞ்சும் தமிழின் குழைவிலும்
மிஞ்சும்கலைகளோடு உலாவலிலும்
நெஞ்சம் மகிழும் நிதம்
00
மரம் கொத்தி இடம் தேடி
மரம் கொத்துவதாய் மனிதன்
மனம் கொத்தி இடம் தேடும்
இனமாயும் ரகமான மனிதன்.
00
வக்கிர மனிதர்கள்தேவைக்கு
உக்கிர வார்த்தைப் பதம்
கக்கும் நிலை மாறினால்
நெஞ்சம் மகிழும் நிதம்.
00
கொஞ்சும் தமிழ் குழைத்து
பஞ்சு மனதில் அனலாய்
நெஞ்செரிக்கும் வார்ததைக ளின்றேல்
நெஞ்சம் மகிழும் நிதம்.


கவித்தாமரை - வேதா. இலங்காதிலகம்.
தென்மார்க் - 18-6-2024






3 கருத்துகள்:

  1. உங்களுடைய நெஞ்சம் எதற்கெல்லாம் மகிழும் என்று அழகாகத் தந்துள்ளீர்கள். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. Janaki Sreenivasulu
    கவித்தாமரை கவிதைப் பொழிய
    நெஞ்ம் மகிழும் நிதம்! ( நிசம்)
    19-6-2024
    Janaki Sreenivasulu

    Vetha Langathilakam
    May be an illustration of 1 person and text
    21-6-2024
    Vetha Langathilakam

    Mathiyuganathan Satgunanathan
    நெஞ்சம் மகிழ மகிழ நிதம் எழுதிகொண்டே இருங்கள்...
    21-6-2024
    Vetha Langathilakam
    Mathiyuganathan Satgunanathan ..பெரிய வீட்டில் நிறையப் பொருட்களுடன் வாழ்ந்து அனைத்தையும் வீசிவிட்டு (இது சின்ன வீடு என்பதால் பொருட்கள் வைக்க முடியாத நிலையால்) இப்போது தான் ஒழுங்கு படுத்தி முடிந்தது.
    எழுதுகிறேன். நன்றி...நன்றி...

    Baba Muthu
    நெஞ்சம் மகிழும் நியம் அtuமை அக்கா
    21-6-2024
    Manjula Kulendranathan
    22-6-2024.

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...