தீதும் தீயவையற்றதும் பிறர்தர வாரா!
தகுதியை வளர்த்துத் தரமாகு!
தகுதியுடையோர் சொல்வது தகுந்ததே!
பகுதியான நிந்தனைகள் புதைத்திடு!
மிகுதியான வருடங்களில் பழகிய
விகுதி (மாறுபாடு) இது தானா!
திருத்து உன்னை! திருந்து!
திமிரைத் துரத்து! தினம்
திறந்த புத்தகமாய்த் தீயவையழித்து
திலகமாகு பண்பிலே தீதும்
தீதற்றதும் பிறர்தர வாரா!
27-1-2021
published 7-8-2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக