விளையும் பயிர் முளையில்
விளையும் பயிர் தளையிலே தெரியுமாம்
முளையிலே கள்ளிப் பால் நெல்லு வேண்டாம்
சளைக்காது ஆத்திசூடி ஒளவை மொழி
விளைவித்து மனதைச் சுயநலமற்று வளர்!
பொய் களவு சூது வாதெனும்
வெயில் வாட்டாது அன்பு கருணை
நெய்து அசிங்கக் களைகள் அனைத்தும்
கொய்து விளைவிப்போம் பயிர்களை வாரீர்
கவிசாகரம் - வேதா. இலங்காதிலகம் தென்மார்க் - 2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக