ஞாயிறு, 31 அக்டோபர், 2021
365. (938) கண்கள்
வெள்ளி, 15 அக்டோபர், 2021
364. (937) வான் புலம் வளர்க்கலாம்
வான் புலம் வளர்க்கலாம்
(வான் புலம் - உண்மையறிவு)
00
வள்ளல் தன்மையாய்
வடிவாகச் சமைத்தலும்
வள்ளிசாக அலங்கரித்தலும்
வாழ்வு அல்ல!
வான் புலம் வளர்க்கலாம்!
00
வரம்பின்றி அறிவு
வசீகரித்தலும் மொழிசார்ந்த
வல்லமைத் தகைமையும்
விசுவருபமாய் வளர்த்தெடுத்தலும்
வழுதலற்ற விதைப்பாகட்டும்
00
உள்ளாடும் அறிவை
உயர்த்து! உக்கும் உடல்
உள்ளதைச் சொன்னால்
உள்ளம் வலிப்பதேன்!
உயிர்ப்பாகுமறிவு உச்சாணிக்கேற்றும்!
00
கவியருவி வேதா. இலங்காதிலகம் - டென்மார்க் 15-10-2021.
செவ்வாய், 5 அக்டோபர், 2021
363. (936) (ஊடகம் . மனிதர்கள்.)
-(இலங்கை சஞ்சிகை ஜீவநதி யில். ஜீவநதிக்கு மிக்க நன்றி 22-3-2021)
மனிதர்கள். -
00
மனிதர்கள் மனம் கடல்
புனித குணவிரிப்பில் அசுத்தங்களை
வனிதமாகச் சுத்திகரிக்காது அதனுள்
விழுந்து அழிகின்றனர் சிலர்
அறிவோசைi அன்போசையை நிதம்
குறியாக அத்திவாரமாக்கும் பெற்றவர்.
பொறியாகி அனுபவங்கள் பொசுக்கியும்
தறித்தும் வீழ்த்தப் பார்க்கிறது. எம்மை.
00
பொல்லாத் துரோகங்களும் அவமானங்களும்
வல்லமையாய் ஏமாற்றித் துகிலுரிய
செல்லாது இது என்னிடமென்று
நல்ல அத்திவாரத்தை உணர்ந்து வாழ்!
வேடிக்கை மனிதராக இன்றி
வாடி வீழாது---------இரக்கம்
கூடிய அன்பு கருணையோடு
தேடித் தலைவனாகு! தெய்வமாவாய்!
00
வள்ளலாகித் தியாகி ஆகு!
எள்ளலற்ற வாழ்வை நோக்கு!
கொள்முதலான பகுத்தறிவை வளர்த்து
குள்ளமனமற்ற பேரறிவாளன் ஆகு!
மனிதநேயம் நிறைந்தவன் மனிதன்.
மனிதம் எங்கே தேடுகிறோம்.
மனிதம் பாதி மிருகம் முழுவதுமாய்
புனிதம் கெட்ட மனதர்களாகிறாரே இன்று.
00
6-11-2020
வெள்ளி, 1 அக்டோபர், 2021
362. (935) விரலோவியம்.
494 (1036) கவியரங்கம் எனது 10வது
நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...

-
2020 சார்வரி --(வீறியெழல்) ஆண்டு காலமெனும் மந்திரவாதியின் கோல் சுழன்று அசைந்தது. காட்சியானது புதிய ஆண்டு காற்றில் கரைகிறது ...
-
https://youtu.be/S9DOv8gB5Yo நிலாமுற்ற குழுமத்தின் டென்மார்க் கவியரங்கத்தில் பாடிய கவிதை . வழி மாறிய பயணங்கள் இல்லத்தரசியாக ...
-
ஆண்டிடட்டும் எம்மை ஆனந்தமாய் தீண்டியது மறுபடியும் தீப ஒளியாக தாண்டிட வந்தது புது வருடம். ஆண்டகைமை காட்டி அடியெடுக்க எ...