கரணமிடும் வாழ்வுப் போர்.
(சொற் பொருள் விளக்கம் --- அரணிக்கும் - அலங்கரிக்கும.; திரணம் - அற்பம் பாயிரம் - வரலாறு)
00
அறியாதவர்கள் கருத்தீயும் போது
குறியாக மனதில் குதூகலம்.
செறிவாக நாளுமிது குவியாததற்கு
நெறியான இலக்கியச் செழிப்புதவும்.
00
மரணம் நோக்கிய பயணத்தில்
கரணமிடும் வாழ்வுப் போர்.
அரணிக்கும் துறைகள் சாதனைகளால்.
திரணமின்றிச் சுடர் வீசலாம்.
00
வானப் பிம்பம் கடல் நீலம்
கானமிசைத்துக் கூறும் அலைகள்
ஊனம் களையும் இன்பம்.
தானமாயிதுவும் கண்களிற்கு விருந்து.
00
உடல் உள வலுவால்
கடக்கும் வீர வசனங்கள்.
படபடககும் இதயத்தால்
தடதடக்கும் நடை கூட.
00
சொல்லால் (எழுத்தால்) ஒருவர் முகமறியலாம்.
சொல்லால் கட்டுமானமிடும் கவிதை
துல்லியமான நதிசூழ் நிலமாய்
அல்லலற்றது இலக்கிய மேன்மை
00
ஆயிரம் கற்கள் எறிந்தாலும்
பாயிரமான பறத்தல் வாழ்வு
வாயில் வழி ஓடிடுமா!
00
மீனவன் முயற்சியின் தூண்டிலால்
மீன்கள் நீச்சலை மறந்திடுமா!
மீண்டும் மீண்டும் நீந்துமே!
21-3-2022
Loga Sundharam
பதிலளிநீக்குநன்று 👌நண்பியே
22-3-2022
Vetha Langathilakam
Loga Sundharam anpum makilchchjum.....Urave!...
Vetha Langathilakam
குயிலோசை
Admin
சொல்லாடல் சிறப்பு
16-4-2022
Vetha Langathilakam
Author
குயிலோசை அன:புடன் மகிழ்ச்சி உறவே
Reply25w
Vetha Langathilakam
Gandhimathi Selvarathinam
Admin
Considering parenthood
அருமை
16-4-2022
Vetha Langathilakam
Author
Gandhimathi Selvarathinam அபுடன் மகிழ்ச்சி உறவே