இலண்டன் தமிழ் வானொலியில் ( ) சகோதரன் பா. சுதாகரனின்
சுனிக்கிழமை நிகழ்விற்கு – அவர் கேட்ட தலைப்பில்..... 9-4-2006ல் எழுதிய வரிகள்.
00
யாரும் யாருடனும் இல்லை!
நா கழன்ற மலரான நிலையில்
சோர்வுடன் நாம் கூறும் சொல்லிது
யாரும் யாருடனும் இல்லையென்று.
யார் சொல்வது! ஏன்ன தாக்கம்!
சரளைக் கல்லல்ல உன் இதயம்!
தரளம்! சற்குண சமுத்திரம் உன்னிதயம்!
திரளும் வெறுமை யெனும் நஞ்சை
தினமும் பாற்கடலாய்க் கடைந்து வீசு!
00
தாழ்வு மனச்சிக்கல் விரட்டு! உன்
ஆழ் மனத்துச் சோர்வை அகற்று!
கீழ்நிலை என்பது நாம் உருவாக்குவது!
சூழ்நிலை மாற்று நம்பிக்கைச் சுடரேற்று!
இணைந்திரு எம் இனிய சொந்தமென்று!
இனிய நிளைவை நீ பிடித்திழு!
இற்றுவிடாத திறமைகள் உன்னுள்
இறைந்து கிடப்பதை ஏன் மறந்தாய்!
00
இலையுதிர்க்கும் மரங்களின் திடநிலை பார்!
கலையிழ்த மனமாக்கும் கருமை வெறுமையை
கலைத்திடு! நிலைகுலைய நீ என்ன
அலைக்காற்றா! அசையாத மனிதன் அல்வலா!
நீ சாமானியனல்ல! பெரும் சாமர்த்தியன்!
நீ சமூகத்துடனிரு அவர்கள் விலக்கினாலென்ன!
நீ அன்போடிரு! ஆவர்கள் வெறுக்கட்டுமே!
நீ ஆசையுடன் வாழ்வை நேசி! துன்புமுனக்குத்தூசி!
- 9-4-2006
Vetha Langathilakam
பதிலளிநீக்குLoga Sundharam
Moderator
Group expert
நன்று 👌நண்பியே
25-4-2022
Vetha Langathilakam
Author
Loga Sundharam
photo wish
etha Langathilakam
பதிலளிநீக்குThank you likers....
Vasantha VJ
கவி மிடுக்கும் கருத்தின் செறிவும்
16 ஆண்டின் பதிவின் காப்பும் மிக அருமை. செதுக்கி உரைத்த வரித்தொடுப்பு. சிகரத்தின் மனவுறுதி.
மிக்கவாழ்த்துக்கள்.
Reply52w
Vetha Langathilakam
Vasantha VJ அன்பின் கவிதை ரசனைக்காரி!....
மகிழ்ச்சி நன்றி..
.ஒரு வார்த்தையும் மாற்றாமல் பதிந்தேன்
9-4-2006
Rama Sampanthan
சிறப்பு , வாழ்த்துகள்
10-4-2006
Vetha Langathilakam
பால கன்
Admin
ஆஹா ஆஹா அருமை அருமை
27-4-2022
Reply51w
Vetha Langathilakam
Vetha Langathilakam
Author
பால கன்
photo wish