வெள்ளி, 24 மார்ச், 2023

407. (940) விருது.

 


     




விருது.

00


விருதுகள் பொழியும் காலமிதா!

அருச்சனை மொழிக்காய்  அமைவதா!

உருவாகும் உயர்விற்கு விருதா!

எருவாகச் செழித்திட உதவுமா!

00

மொழி   நேசர் பூசித்து 

வழி சமைப்பார் விருதிற்கு.

அழிமதியோர்   இலஞ்சத்திலும்  வளர்ப்பார்

விழியாகவும் நேர்மையாளர் காப்பார்

00

மொழி நேசருடன் வாழ்தலினிமை

எழிலான தாயகமும்   அயலிடமான

தொல்காப்பியத் தோன்றல்  இடமாம்

நற்பாரதமும் விருதின் விளைநிலமோ!

00

நேர்மை நியாயம் கொண்ட

கோர்வை விருது  மதிப்படைத்து

போர்வைச் சமூக சேவையும்

தீர்வாகும் ஒரு விருதிற்கு.

00

வேதா. இலங்காதிலகம் -  தென்மார்க் - 22-3-2023







2 கருத்துகள்:

  1. Vetha Langathilakam
    Ramachandran B
    அருமை உண்மை தோழரே
    முனைவர் கவிஞர் பா .ஶ்ரீராம்.
    23-3-2023
    Vetha Langathilakam
    Author
    Ramachandran B mikka nanry bro

    Vasantha VJ
    விருதுகள் சான்று
    வெல்க பணியே
    வாழ்த்துக்கள் மிகையான
    வாழ்க செம்மல் கவியே!
    26-3-2023
    Vetha Langathilakam
    Vasantha VJ mikka nanry sis
    27-3-2023

    பதிலளிநீக்கு
  2. Vetha Langathilakam
    வாழ்த்துக்கள் நண்பி from Nv.Eswary
    29-3-2023
    Vetha Langathilakam
    கரிசனத்துடன் கவனமாகக் கருத்துகளோடு
    கவிதை எழுதினாலும் கச்சிதமாகக் (தக்கபடி)
    கவனமுடன் சில சொற்கள்
    கஞ்சமின்றிக் கசிவது கவர்ச்சியன்றோ!
    கன்னித் தமிழ் கனிவாய்க் கவராதோ!! 29-3-2023

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு