மனிதன் மாறுவானா!!!!!
சரவணன் பெயர் சூட்டி
மரணம் என்பதை மறக்கடித்து
அரவணைக்கும் பணம் எதுவரை!
சுரண்டி வாழ்தல் கெடுதி!
பரம்பரைக்கும் கேடு தரும்!
நரகலிக்கும் கடனைத் தொடமாட்டார்.
நிரந்தரமாய்க் கடன் ஒளித்து
பரிதவிப்பின்றி நிம்மதியாய் வாழ்வார்.
00
உரம் சொந்த உழைப்பு!
தரவேணுமெனும் சுரணை நேர்மை!
தரமுடியாதெனும் ஏமாற்று வழி
பரவணிப் படியும் நடக்குமோ!
இரவல் பணத்திற்குக் கைநீட்டல்
அரவமது கொடிய கரவு!
உராய்ந்து சுகம் தருமெனும்
உரத்த எண்ணம் தவறு!
00
திரவியம் என்று திரண்டு
துரத்தும் கடன் தொல்லை
துரிதமாய்த் துயிலவும் விடாது!
தெரிநிலையால் கடனைத் தொலைப்பார்
நரகம் என்று தெரிந்தும்
நயப்பார் யார் உளர்!
நமசிவாயன் ஏமாற்றுக்காரனை மாற்றுவானா!
நன்னயம் நிறைய அருள்வானா!!!!!.....
00
வேதா. இலங்காதிலகம். தென்மார்க் 29-1-2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக