தமிழ் மொழி -47 கவிதைகள் வேதாவன் வலை -1லும்
தமழ் மொழி -33 வேதாவின்வலை -2லுமாக 5-2-2025ல்
மொத்தம் 80 கவிதைகளுடன் இது 81வது கவிதையாக வலையேற்றுகிறேன்.
தமிழ்மொழி 81
ஓப்பற்ற மொழிக்கு என் அணி
ஆராரும் வாசிக்கார் ஆராரும் ஏந்திடார்
ஆரார் தான் அணைத்து ஆதரவு தருவார்!
சோரா நிலையாய்ப் பா புனைதல்
சோனா மாரியாயினும் மதிக்கார் விரும்பார்
00
கவிஞர் மொழிப் புலமை சொல்லாட்சி
கற்பனைத் திறன் பொது நோக்கு
கவியாக்கும் உத்தி நூல் அறிவை
பவித்திரமாய் உச்சி முகர்ந்து பாராட்டலாம்
00
மனதைச் செலுத்தி மகிழ்ந்து புகுந்தால்
இனிது இலக்கியம் என்பது உணர்வு.
எங்கேயும் எப்போதும் அறிவு ஆனந்தம்
சங்கின் பாலாய் அருந்தலாம் மகிழலாம்.
00
கவிதை இனிமை அறம் அன்றோ!
உவிதல் அவிதல் சாதல் ஆகாது.
குவிதலற்ற (கூம்புதல்) பாத்திறமை புதுமை பெருமை.
செவிச்செல்வம் மனச் செல்வமே!
00
அகிலத்தில் நிலைபெறவாக்கல் யார் செயல்!
அலகிலா (அளவிலா) இறை செயலா அன்றி
அறிவுடை மாந்தர் அருஞ் செயலா!
செறிவுடை ஆதரவு ஈய்ந்து (ஈதல்) சிந்திக்கலாம்.
00
வேதா.இலங்காதிலகம். தென்மார்க் 5-2-2025
00
Verona Sharmila
பதிலளிநீக்குசூப்பர் ❤
5-feb-2025
Sandradevi Thirunavukkarasu
Nice
5-2-2025
Mano Ganeshalingam
Who is the young princess. What a creative. Very nice
Reeta Naharajan
GIF
Vindyeswary Nadarajah
So pretty 💕
15w
Reply
Janaki Sreenivasulu
அழகே அழகு
4-2-2025
Alvit Vasantharany Vincent
வாழ்த்துகள் சகோதரி💐💐
Gomathy Sathi
வாழ்த்துக்கள் அண்ணி
Jeya Thevendra
GIF
Nagu Satha
So pretty 😍
Vindyeswary Nadarajah
15w
Reply
Ponnambalam Ramanathan
நீங்களா சுப்பர
அழகு