2 years ago
ஒரு ஆணை விற்பதுவோ திருமணம்!
மனைவி சொல்லே மந்திரமாய்
அனைத்து இணைவிலும் மௌனத்தில்
நனைவதே உறவுக்கு மருந்தோ!
அன்பும் உதவிகளும் அருத்தமற்றதோ!
திருமணம் மனிதனை மாற்றுகிறது
பெண்ணைத் தெய்வம் என்பது
பிசாசு என்றும் மாறுகிறதோ!
அன்பான பிள்ளையானவனை ஒரு
அரக்கனாக்குகிறதோ! ஒன்றும் புரியவில்லை
மௌனம் எல்லாவற்க்கும் விடையாகாது!
00
வேதா. இலங்காதிலகம்- தென்மார்க் -26-2-2023
Alvit Vasantharany Vincent
பதிலளிநீக்கு//மௌனம் எல்லாவற்றுக்கும் விடையாகாதுதான்//
2y
Reply
Janaki Sreenivasulu
பதிலளிநீக்குஆம் சகோதரி!நிகழ் காலத்தில் ஆண் பிள்ளைகள் பெற்ற பெற்றோர் பலரின் நிலை இதுவே!அருமையானபதிவு!நன்றி🙏