எங்கு போய் முடியுமிது!
நாடு கேடு வழியில் போகிறது.
கோடு போட நல்லவனில்லை.
ஆடு மாடு விலங்காகிறார் மனிதர்.
எங்கு போய் முடியுமிது!
30-3-2010.
00
பணிவைக் காணோம் அளவற்ற
துணிவு துணையென்ற பெரும்
கணிப்போ திமிர் என்ற கனம்
நிமிரும் ஆணவம் பெரியாரைக்
கனம் பண்ண விடுவதில்லையோ!
நடு! கொடியேற்று!உன்னைக்
கடும் காற்று காக்கட்டும்!
00
தலைப்பாரம் கருமையானது குறைக்கலாம்!
தன்னைத் தவிரப் பலர் அறிவுடனும்
உன்னதத் திறமையுடனும் உலகில்!
விலையற்ற திறமை மலையாக
விலையின்றிக் குவிந்திருக்கு பிறரிடம்
பெருமையின் வீக்கம் மனக்கழுதை!
சுமை பருமனாகினால் படுத்திடும்.
00
வேதா.இலங்காதிலகம். –தென்மார்க் - 13-2-2025
00
பதிலளிநீக்குStella Paulraj
அருமை 👌
13-2-2025
Vetha Langathilakam
https://kovaikkothai.blogspot.com/2025/02/446-989.html
446 (989) எங்கு போய் முடியுமிது!
KOVAIKKOTHAI.BLOGSPOT.COM
446 (989) எங்கு போய் முடியுமிது!
446 (989) எங்கு போய் முடியுமிது!
13-2-2025
Remove Preview
Vetha Langathilakam
No photo description available.