புதிய தை
புதிய தை இனியதைத் தருவதை
பூமியில் யாவரும் பெறுவதை
எதிர்வரும் நாள்முதல் காண்பதை
இறையதை வணங்கியே வாழ்த்தித் தை
தை இதன் வருகையால் வரைகிறேன்.
தமிழரின் தனிப்பெரும் நாளிதைத்
தரணியில் போற்றுவோம்.
00
பொதியான அறிவைத் திற!
நிதியான தமிழன் கலாச்சா
மதிப்பை உயர்த்து! காலித்தன
கொதிப்பு நோய் பாதிப்பு!
சங்கைக் கேடாகத் தமிழ்
சங்கு ஊதாதே தமிழா!
எங்குமுன் பண்பாடு காத்து
பாங்குடன் ஓங்கிடு தமிழனென்று!
00
உறவும் பிரியமும் பணத்திற்கு அடமானம்
திறனுடன் ஏமாற்றிப் பணத்தைச் சுருட்டுதல்
அறமல்ல அறிவுமல்ல கோடுகள் மீறலே!
கோடுகள் மீறலில்
எழும் நாடகம் வாழ்க்கையில்
ஆயிரம் பாடுகள் எழுவது ஆசையால்.
நாடுகள் கூட விதிவிலக்கல்ல.
நாடகம் ஆடியும் வசனம்
பூடகமாய்ப் பேசியும் எழுதியும்
ஊடகத்திலும் ஆட்டம் அதிகம்
00
வேதா. இலங்காதிலகம். தென்மார்க் -19-2-2025
Nagu Satha
பதிலளிநீக்குWow!
19-feb-2025