மனிதநேய இழப்பால் வரும் தொல்லை..
(கண்வளையமாய் -மத்தளத்தின் கண்ணைச் சுற்றியுள்ள வட்டம்.)
எண்ணக் கனதியால் அச்சறுக்கை இன்மையால்
கண் துஞ்சாமை - இதயம் பலவீனமாகும்.
கண்டவர் எல்லாம் தடையை வெட்டி
உண்மையறிவு இன்றி ஆடுமாடுகளை
எண்ணிக்கை யின்றிக் காணியுள் தள்ளுவார்.
00
நீளும் தொல்லை மனிதநேய இழப்பால்.
வேண்டுதலும் நீண்டது விரைவு வினைக்காக
கண்காணிப்புச் சுயமானால் கண்ணிறைந்த பலனாகும்.
கண்ணும் கருத்துமாய்ப் பொருள் சேர்த்து
கண்வளையமாய் காணி கட்டுக்குள் ஆனது.
00
அடிகோலுதலைத் துணிந்து கையாளுதல் சுலபமானது.
முடியுமா எங்களால்! முடிப்போமா எண்ணப்படியெனும்
படிகள் வெகு எளிதானது மகிழ்வு!
செடிக்காடுகள் மறைந்தது. மனதுக்கு நிம்மதி!
படிப்படியாக நல்லதே நடக்கட்டும். நடக்கட்டும்.
00
பொருள் இருந்தால் பொட்டலும் பொலிவாகும்.
பொறுமை விடாமுயற்சி நற்பலனாக்கும்.
பொதுவுடைமையும் சுயநலமும் உயர்வு தரும்.
பொதிய மலையாய் நிம்மதி உயர்வதும்
பெம்மானவன் பிரம்மபுரத்தான் அருளல்லவோ!
00
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க். 9-2-2025
00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக