செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

500 (1042) அப்பப்பா – அப்பு

     அப்பப்பா – அப்பு

கோப்பாயில் எனது அப்பப்பா அமரர் முருகேசு சுவாமிநாதர் ஒரு காலத்தில் 1960ல் என்று நினைக்கிறேன்  J.P ஆனபோது  (சமாதான நீதவான்) அவரது வாழ்த்துப்பாக்கள் வாழ்த்துரைகளில்.....

....எங்குமிசை வளர் சைவஆசிரியர் கழகமொன்றை எங்கள் தேசம் தங்க அரும்பாடுபட்டோன்.........

....1916   ம்..ஆண்டளவில் சைவ ஆசிரிய கலாசாலை இல்லாமை கண்டு இவர் இன்னும் சில பிரமுகர்களுடன் சேர்ந்து கோப்பாயில் ஐக்கிய போதனா ஆசிரிய கலாசாலை என்னும் பெயருடன் ஆரம்பித்து நடத்தினார்......

கோப்பாய் நாவலடி வீட்டில் புலோலி திரு கோவிந்தபிள்ளை குமாரசுவாமிப் புலவர் இருந்து சு. சிவசுப்பிரமணியத்தின் உதவியுடன் திரு சுவாமிநாதன் மேற்பார்வையுடன் பாடசாலைக் கட்டிடத்தில் ஆசிரியர் பயிற்சிக் கழகம் நடந்தது. இதற்கு இந்துபோட் இராசரத்தினமும் காரைநகர் அருணச்சல உபாத்தியாரும் டக்டர் P..B சுப்பிரமணியமும் இன்னும் பலர் நிரம்பிய உதவி செய்தனர். அல்வாய் பண்டிதர் கணபதிப்பிள்ளை வகுப்பு ஆசிரியராக இருந்தார். திரு கோவிந்தபிள்ளை குமாரசுவாமிப்பிள்ளை புலவராவார். தின்னவேலி –மட் டுவில் பண்டிதர் கணபதிப்பிள்ளை மாணவராக நாவலடியில் படித்தவர்

இவர்கட்கு  இருப்பு படுக்கை சாப்பாடு எல்லாம் அக்காலப் பெருமக்கள் உதவினார்கள். மு.சுவாமிநாதர் எஸ் -ஆர் .ராமநாதன் துரையுடன் பேசி அவரின் இருபாலை கோண்டாவில் றோட்டில் உள்ள காணியில் அரசாங்கம் கட்டிடம் கட்டி இன்று கோப்பாய் கலாசாலையானது

இவைகளை எனது தந்தையார் சுவாமிநாதர் நகுலேஸ்வரரின் நாட்குறிப்பிலிருந்து எழுதினேன்.

கோப்பாய் அமரர்  முருகேசு சுவாமிநாதர் என்று குகிளில் தேடினேன் சரஸ்வதி பாடசாலை (இன்றைய நாவலர் பாடசாலை)  100வது விழா மலர் மேலும் விக்கிபீடியாவிலும் பல வாசித்தேன். வெள்ளை ஆடைகளுடன் தலைப்பாகை போட்டு மகன்மார் அவருக்கு ஆடைகளில் உதவி செய்து யூரி வேலைக்கு அனுப்புவதும் எனக்கு நினைவு உள்ளது. 

இவரைக் கண்ணாடியப்பா என்று அழைப்போம். கோப்பாய் ஆசிரிய கலாசாலை என்றதும் எனக்கு அப்பப்பா – அப்பு நினைவுக்கு வந்துவிடும்.

வேதா. இலங்காதிலகம் - தென்மார்க்  16-8-2025

    


      


      








1 கருத்து:

  1. Kumar Thirukkumaran
    My Grand father J P Award Ceremony
    16-8-2025
    Thevaranjini Gowripalan
    Our grandparents 🙏🏻🙏🏻
    17-8-2025
    Pirashanthan Srivaratharajan
    கல்வி முன்னோடி
    17-8-2025
    Vetha Langathilakam
    Pirashanthan Srivaratharajan அப்பப்பா - அப்பு - கண்ணாடியப்பாவின் பூட்டப்பிள்ளை இவர்.
    யோகீஸ்வரி வரதராஐனின் மகன்.
    கண்டி பேராசிரியர்.
    அப்பப்பாவின் ஜீன்ஸ்
    17-8-2025
    Baba Muthu
    Pirashanthan Srivaratharajan you too my dear

    Denmark Shan Subramaniam
    இனிய நல் வாழ்த்துகள் 🌹
    17-8-2025
    vetha - Denmark Shan Subramaniam இவர் அப்பப்பாவின் உடன் பிறப்பின் மகன்
    Paramasivam Ponnampalam
    🙏
    17-8-
    Paavai Jeyapaalen
    17-8-2025 rose in hand -- photo wish

    பதிலளிநீக்கு

500 (1042) அப்பப்பா – அப்பு

     அப்பப்பா – அப்பு கோப்பாயில் எனது அப்பப்பா அமரர் முருகேசு சுவாமிநாதர் ஒரு காலத்தில் 1960ல் என்று நினைக்கிறேன்  J.P ஆனபோது  (சமாதான நீதவ...