தனக்கு இன்பமானால்....
கன்னியாய் கண்ட முகம்
கருவுற்ற கற்பனை முகம்
உரு மாற்றம் ஒரு
திருவுரு தெய்வ சித்தம்.
கள்ளம் கபடமற்ற மனம்
கருவுற்ற பிள்ளைக்கு ஆரோக்கியம்
00
சாத்தான் வேதம் ஓதுவதாக
ஊத்தை உபதேசங்கள் உதிர்த்து
பூத்திடும் மலரான உறவுகளை
பாத்தி கட்டி ஒதுக்குதல்
பூத்த மலரைப் பிடுங்குதல்
பூரிப்பு அல்ல எதிர்மறையே!
00
மனதைக் கலைத்து உறவு
மனநிலையைக் குளப்புதல் ஒரு
வினய மிகு(கொடுஞ்செயல் -வஞ்சம்) செயலே
தனக்கு இன்பமானால் தன்
வனப்பு உதர சிசுவும்
வளம் பெற்று வளரும்.
00
கவித் திலகம் வேதா. இலங்காதிலகம். தென்மார்க். 1-6-2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக