வெள்ளி, 27 ஜூன், 2025

483 (1025) ஏழாவது பயண விவரணம் - வேல்ஸ்

 


      ஏழாவது பயண விவரணம்


  ஆறு பயணக் கட்டுரைகள்  வேதாவின் வலை ஒன்றில் எழுதியுள்ளேன்.   இது ஏழாவது பயண விவரணம்.   Lavanniyas vedio down....மகள் லாவண்யாவின் ஒளிப்பதிவு கீழே உள்ளது.


வேல்ஸ் பயணம். 17-6-2025

        


17-6-2025 லிருந்து ஐந்து நாட்கள் இங்கிலாந்து வேல்ஸ் ல் நின்று  பின்னர்  இவரின் சகோதரர்களுடனும் நின்று 26-6-25 தென்மார்க் வந்தோம். 4 நாட்கள் நல்ல  கோடை நாட்களாகவும் கடைசி நாள்   மழை காற்றாகவும் வேல்ஸ் ல்  இருந்தது  .அவுஸ்திரியா - சுவிஸ் போல மலை   நாடாகவும் வேல்ஸ் இருந்தது. மகளின் இருக்கையறை - மாடிப்படி  - படுக்கையறை  சன்னல் காட்சிகள் எல்லாம் ஒவ்வொரு புத்தகம் போல அழகு கொட்டி  இருந்தது.  
                               

 
நமது நகரம் ஓகுஸ் ல் இருந்து தலை நகர் கொப்பென்கேகனுக்கு விமானம் ஏறி - அங்கிருந்து மன்செஸ்டர் நகருக்கு விமானம் எடுத்தோம்.
 மன்செஸ்ரர்  நகரம் வடக்கு இங்கிலாந்தின் தலைநகரம் என விளங்கும் பெரிய நகரம். 452 000 பேர் வசிக்கின்றனராம்.  அங்கிருந்து   ஸ்நோடோனியா பாக்

            


 எனும் மகள் வசிக்கும் வடக்கு வேல்ஸ்;க்கு  2 மணிநேர   பயணம்  டாக்சியில் சென்றோம். மலைகளுக்கு ஊடான பயணம்.
வேல்ஸ்  ஐக்கிய இராச்சிய ஆளுகைக்கு உட்பட்ட நாடு. கிழக்கே இங்கிலாந்தும் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் ஐரியக் கடலும் உள்ளது. 3 மில்லியன் மக்கள் தொகையாம்.  ஆங்கிலமும் வேல்ஸ் மொழியும் அதிகாரத்தில் உள்ளது. தெருவோரம் - வீட்டு எல்லை  மதில்கள் அனைத்தும் கற்களால் கட்டப் பட்டது அழகிய காட்சி.  --     முதலாவது படத்தில்  இந்தக் கல்லு மதிலைக் காணலாம்
ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வாசித்தேன். இல்லையம்மா இது உச்சரிப்பு  வேல்ஸ் மொழியால் ஆனது என்று சொன்னார்கள் - மிக வித்தியாசம்.
யுகே யில்  உயரமான மலை பென் நெவிஸ் (ben nevis  ) ஸ்கொட்லாண்டில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1345 மீட்டர் உயரம். யுகே யில் 2வது உயர மலை ஸ்நோ டோன் -   வேல்ஸ் ல் உள்ளது 1085 மீட்டர் உயரம். 3560 அடி. இங்கு பல காலமாக புகையிரதத்தில்         

               

       


   மலை உச்சிக்கு சுற்றுலா செல்லலாம். நாங்களும் சென்றோம்.   ஸ்னோடன் மலை ரயில்வே முதன்முதலில் 1896 இல் திறக்கப்பட்டது, இது 2025 இல் 129 ஆண்டுகள் பழமையானது. இது அதிகாரப்பூர்வமாக ஈஸ்டர் திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 1896 அன்று திறக்கப்பட்டது.   
மலை உச்சியில் திசைகாட்டி கட்டியுள்னர். இதை குதிரைச் சப்பாத்து என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
 
         

  மலை உச்சியில் நாங்கள்.
 
       




      

  அழகிய இடம் காலநிலை கோடையாக இருந்ததால். உச்சியில் அன்று  26 பாகை வெப்பம் கீழே 32 பாகை.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...