இரகசியங்கள்
காதுக்குள் சொல்வது, யாரும்
காணாமல் சொல்வதுவும் இதுவே!
இரகசியம் இல்லாதவர் எவருளர்!
இரகசியமும் வாழ்வைப் பரகசியமாக்கும்.
கடின உழைப்பே வெற்றிக்குக்
கருவாகப் பற்றும் இரகசியம்.
கடதாசி உறைக்குள் எத்தனையாம்!
கருமமாய்த் தபால்காரர் காவுகிறார்.
முத்தமும் காதலும் இரகசியம்
சத்தாகி நெழிந்து பூமியை
முத்தமிடும் நதியின் இரகசியமென்ன!
புத்தியாய் அனுப்பும் மலைத்தூதுவனோ!
மினுமினுக்கும் நட்சத்திரங்கள், கருமிருட்டு,
முணுமுணுக்கும் மரங்களினிரகசியங்கள், காற்றின்
கிசுகிசுப்பும், கடலிற்குள்ளும் எத்தனை
எத்தனை மனங்கவரும் இரகசியங்கள்!
ஒளிக்கும் பல எண்ணங்கள்
போற்றும் ஒரு இரகசியம்
ஆற்றலுடை அமைதி மாளிகை!
தோற்றுவிடும் பணத்தின் தகர்ப்பால்.
மனோசக்தியையுடைக்கும் மனோவசிய இரகசியங்கள்
ஆரோக்கியம், ஆன்மிகம், எண்கள்,
தியான இரகசியங்ளாக வெற்றி
வாழ்வில் பல இரகசியங்களுள
நிர்வாகத்துள் இரகசியம் அவசியம்
அரசாங்கம் இதுவின்றேல் அம்பலமாகும்.
பனிக்குள்ளே குளிர் பரகசியம்
தனியனாகிலும் இரகசியம் போற்றி வாழ்!
22-1-2021
பதிலளிநீக்குDenmark Shan Subramaniam
நல் வாழ்த்துகள்
11-4-2021
Vetha Langathilakam
Denmark Shan Subramaniam anpudan Mkilchchy..
12-4-2021
Kannadasan Subbiah
அருமை சகோதரி 🙏
11-4-2021
Vetha Langathilakam
Kannadasan Subbiah anpudan Mkilchchy..
12-4-2021
Sarvi Kathirithambi
ரகசியம் தந்துள்ள தொடுப்பு. . . .... இரட்டிப்பு ஈடுபாடு.....ஈர்க்கும் என்றும் ....வாழ்த்துக்கள்
12-4-2021
Vetha Langathilakam
Sarvi Kathirithambi
May be an image of text that says 'உளமார் நீத அன்பும் மகிழ்வும்!'
12-4-2021
Ratha Mariyaratnam
அருமை அக்கா இரகசியத்த்தைப் பற்றி சகல விடயங்களையம் சொல்லிவிட்டீர்கள்
15-4-2021
Vetha Langathilakam
Rathy Mohan
இரகசியம் இரசித்தேன்
15-4-2021
vetha:-
Rathy Mohan
May be an image of text that says 'உளமார் நீத அன்பும் மகிழ்வும்!'
பதிலளிநீக்குKannadasan Subbiah
Admin
மிகவும் அழகான ரகசியக் கவிதை சகோதரி
·18-4-2021
Vetha Langathilakam
Kannadasan Subbiah
May be an image of text that says 'அன்புவழி இணைந்தமைக்கு மகிழ்ச்சி! என்றும் இணைந்திருங்கள்!'
Sujatha Anton
ஒளிக்கும் பல எண்ணங்கள்
போற்றும் ஒரு இரகசியம்
ஆற்றலுடை அமைதி மாளிகை!வாழ்க தமிழ்!!!!
5-5-2021
Vetha Langathilakam
Sujatha Anton mikka mkilvum anpum...