ஞாயிறு, 31 அக்டோபர், 2021

365. (938) கண்கள்

 






கண்கள்

00
சொற்கள் இல்லை அற்புத நாதமில்லை
பொற்பதமாய்க் காண்பதை நற்பதமாய் இரசிக்கும்.
பழுதற்ற காதலையும் எழுதும் கண்கள்
பார்க்கும் - சிரிக்கும் - பேசும் கண்கள்
00
அதிசய உறுப்பால்  இரவுப் பார்வையுண்டு
அதிசயம் விலங்குகளிற்கு அதிக சக்தியமைந்தது
கண்கள் பார்வையால் எண்ணம் உணரலாம்
கண்கள் மீன்களாகக்  கற்பனையில் மலருமாகிறது
00
தென்றலில் மயங்கும் கண்களின்
எடை ஏழு புள்ளி  ஐந்து கிராம்
கட்டிப் போடும் அச்சுறுத்தும்
பொக்கிசமாகப் பாதுகாக்கலாம்
00
தண்மைப் பனித்துளி கண்கள்
கண்ணுக்குக் கண்ணோக்கிக் கருத்திட்டால்
உண்மையின் அளவீடு தெரியும்
கண்ணாடியாய் மனதைக் காட்டும்
00
இளமைக்கு விருந்தாகும் மருந்தாகும் கண்கள்
களமான பள்ளியாகும் பார்வை விருந்து
அம்சுடர் நெடுவேல் - மானின் விழி
மனித இச்சைகளைப் பார்வை தீர்க்கிறது
00
கண்கள் ஓவியம் காவியம் வரையும்
கண்ணுக்கு விருந்து கள்ளப் பார்வை
கண்புரை முதுமையில் கடின தொல்லை
கருத்தாயுதவும் கணிக்கும் அறுவை சிகிச்சை
00
செந்தணல் கவி -  வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்  28-10-2021







1 கருத்து:


  1. Rathy Mohan ( Pune tamil sankam)
    கண்கள் பேசுகின்றன
    31-10-2021

    Vetha Langathilakam
    Rathy Mohan
    May be an image of flower, outdoors and text that says 'மகிழ்ச்சி இனிமை!'
    31-11-2021



    Selva Raj (vaanam vasappadum)
    மிக அருமை
    31-10-2021

    Vetha Langathilakam
    Selva raj
    May be an image of flower, outdoors and text that says 'மகிழ்ச்சி இனிமை!'



    Denmark Shan Subramaniam
    நல் வாழ்த்துகள்
    31-11-2021
    Vetha Langathilakam
    Denmark Shan Subramaniam
    May be an image of flower, outdoors and text that says 'மகிழ்ச்சி இனிமை!'

    Subi Narendran
    கண்களின் காவியம் மிகச் சிறப்பு.
    31-11-2021
    Vetha Langathilakam
    Subi Narendran

    Sarala Vimalarajah
    அருமை அக்கா
    31-11-2021
    Vetha Langathilakam
    Sarala Vimalarajah

    Manjula Kulendranathan
    கண்களால் அக்கா வரைந்த அன்பேன்னும் ஒர்
    கவிதை அழகு அக்கா
    31-11-2021
    Vetha Langathilakam
    மிக மகிழ்ச்சி நன்றி Manju
    எவ்வளவு கருத்தமைய எழுதினாலும் அலட்சியமான உலகம் இது


    பால கன்
    Admin ( தமிழ்சங்கம் புலமைக்கு மட்டுமே) 1-11-2021…
    பேசாது
    பேசும் ஓவியம்
    காவியங்களின்
    உயிர்மூச்சு
    எழுத்துக்கள் தவிக்கும்
    சொல்வதைத் திருப்பிச் சொல்ல
    இதயத்தின் எழுத்தாணி
    உணர்வுகளின் உச்சரிப்பு
    கனவுகளின்
    தாய்மடி
    கற்பனையின்
    ஊற்று
    காற்றில் கடத்தும்
    கம்பில்லாத் தொழில் நுட்பம்
    நாவின்
    துலாக்கோல்
    வேற்றுமையின்
    ஒற்றுமை
    இருவாசல்
    கோவில்.
    "கண்கள்"
    அருமை அருமை 🙏🙏🙏

    Vetha Langathilakam
    பால கன் மிக மகிழ்ச்சி நன்றி சகோதரா
    எவ்வளவு கருத்தமைய எழுதினாலும் அலட்சியமான உலகம் இது

    Vetha Langathilakam
    பால கன்
    Admin 1-11-2021…
    Admin 1-11-2021
    Vetha Langathilakam
    தங்களின் வரிகளிட்ட ஊக்கம் எமக்கும் கொஞ்சம் எழுத வைத்தது.
    மிக்க நன்றி 🙏🙏🙏

    Vetha Langathilakam
    Mathialagan Mathia ( in thamil sevai)
    அருமை
    1-11-2021… Vetha Langathilakam
    Author
    Mathialagan Mathia nanry


    Ma La----(தொடுவானம் தூரமில்லை)
    Admin super photo wish 1-11-2021
    -----
    அருள் நிலா வாசன்
    அழகிய கவிதைக்கு உங்கள் அழகிய கண்கள்.
    1-11-2021
    Vetha Langathilakam
    அருள் நிலா வாசன் anpudan makilchchy

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...