சனி, 14 அக்டோபர், 2023

415 (948) நாண் (தூண்) நீ!

 



நாண் (தூண்) நீ!



உறவென்று நினைத்தால்  உள்ளம் மகிழும்

அறமற்ற உறவு அருவருப்புத் தரும்

திறம் எது! அன்பு செய்தல்

இறப்பு வந்தால் எது மிச்சம்!

00

எல்லையிட்டு வரையறை செய்தல் அச்சறுக்கை

தொல்லை  யில்லை  அன்பு மிக்கோர்

சொல் செயல் உறவாடும் ஒழுக்கம்

பல் நலம் உறவாடும் கோட்பாடு

00

குலம் விளங்க மனிதநேயம் பேணாவிடில்

பல கலைகள் கற்றும் பயனென்ன!

நலம் தரும் வெண்மை மனம்

பலம் தரும் வல்லவராய் வாழ்!

00

மாண்புறு மனிதனாய் வாழ முயலு!

காண்கிற மக்களைக் கவர்ந்து இழு!

தூண் போன்று பண்பாட்டைத் தாங்கிடு!

நாண் நீ நல்ல சமுதாயத்திற்கு!

00

கிட்ட மரணத்தைத் தொட்டவரையும்

எட்டி சுக நலன் விசாரி

தட்டி நலன் கேட்காதவன் மனிதனில்லை

எட்டிப் போவது நோய் மனம்

00

கவிச்சுடர்  -வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் -14-10-2023





1 கருத்து:

  1. Sarala Vimalarajah
    அருமை அக்கா
    14-10-2023
    Vetha Langathilakam
    Sarala Vimalarajah அன்புடன் மிக்க நன்றி

    Janaki Sreenivasulu
    நலம் தரும் வெண்மை மனம் வாழ்க!அருமை சகோதரி!
    High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
    14-10-2023
    Vetha Langathilakam
    Janaki Sreenivasulu அன்புடன் மிக்க நன்றி

    Manjula Kulendranathan

    Rama Sampanthan
    சிறப்பு
    14-10-2023
    Vetha Langathilakam
    Rama Sampanthan அன்புடன் மிக்க நன்றி
    Reply
    1d
    Vetha Langathilakam
    May be an image of 1 person and text that says 'P. Kanaga Top contributor Like Reply Share 12m Vetha Langathilakam Author Top contributor P. Kanaga'
    15-10-2023
    Stella Paulraj
    அருமை 🌹

    Vetha Langathilakam
    Stella Paulraj அன்புடன் மிக்க நன்றி
    15-10-2023

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு