திங்கள், 16 ஜூன், 2025

482 (1024) இயற்கை – 1 - பவளப்பாறைகள்

 

           


       



           இயற்கை எனும் தலைப்பில் வேதாவின் வலை  1ல் 78 கவிதைகளும் 

வேதாவின் வலை 2ல் 94 கவிதைகளும் வலையேற்றியுள்ளேன். இனி இயற்கை தலைப்பில் கோவைக் கோதை புளோஸ்பொட்.கொம் ல் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கின்றேன்.


இயற்கை – 1 - பவளப்பாறைகள்

00

(கடல்உயிரிகள் வாழ்ந்து முடிந்த எச்சங்கள்

வாழ்ந்துகொண்டிருக்கும் சேர்க்கைகளும் பவளப்பாறைத் திட்டுகள்)

00

ஆழ் கடலின்  நெஞ்சாங்கூட்டில்

சூழ் வண்ணப் பவளப்பாறை பவளத்திட்டு

வாழ்கின்ற பல உயிரினங்களின் சரணாலயம்

தாழ்வில்லா உயர்நிலை ஓவியக்கூடம்

ஆழ்கடலுயிர்களின் வாழ்வாதாரம் பவளப்பாறை.

00

எண்ணிடாதீர்கள்!  இது பாறை இனமல்ல!

கண்பறிக்கும் நகரமுடியாத விலங்கினம்

நுண்ணிய பவளம் உயிரினமே பாறை உருவாக்கிகள்

சுண்ணாம்புக் கற்களாலான முதுகெலும்பற்ற உயிரினம் (பாலிப்)

விண்ணிலிருந்தும் பார்த்து வியக்கலாம்.

00

உள்ளெடுக்கிறது  பவளஉயிரி கடல்நீரில் கல்சியம் (சுண்ணம்)

தள்ளுகிறது வெளியே கல்சியம் காபனேட்டாக

பள்ளத்தில் பவளப் பூச்சிகளின் இனம் உயிரி லார்வாக்கள்

மௌ;ளக் கற்பாறைகளில் ஒட்டிய வளர்ச்சி

பாலிப் எனும் மெல்லுடலிவகை பவளப்பூச்சியாகிறது

00

படர்ந்த பல வண்ணக் கம்பளமாக 

இடம்பமான மொசைக் தரையாக வண்ண

கடலடித் தோட்டமாகப் பல இலட்சம் ஆண்டு

தொடர் நிகழ்வாகப் பவளப்பாறைப் பாசியினங்கள்

வாழ்ந்து மடிந்து பவளப் பாறையாகிறது.

00

உல்லாசப் பயணிகள் உள்ளம் கவர்வது

எல்லாம் மறக்கச் செய்யும் பவளஉயிரிகளின்

நில்லாத  பலவண்ணப்  பவளப்பாறை நடனங்கள்

எல்லாமாக இவ்வாற்றல் தருவது பாசிகளே!

சொல்கிறார் சார்லஸ் டார்வின் இது - அணைந்த எரிமலைத் தீவாம் -

00

கவிச்சாகரம் - வேதா இலங்காதிலகம் - தென்மார்க் - 16-6-2025






1 கருத்து:

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...