ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

467 (1010) திறப்பெனும் நம்பிக்கை.

 


        

     



                         


              திறப்பெனும் நம்பிக்கை.



காற்றோடு பேசும் மரம்

தோற்றிடுமோ பேசாத மரம்

ஆற்றோடு பேசும் கரை

ஊற்றோடு உருளும் கூழாங்கல்

ஆற்றொழுக்கால் அழகாக அமையும்.

00


நட்பை அழிக்கும் கொலைக்காடு.

உறவை அழிக்கும் வன்மக்காடு

பறவைச் சிறகொடிக்கும் உலகு

திறமை கண்டு பொறாமையால் எரியும்.

சிறந்தோர் மனவியல்அமைதியில் படியும்.

00


நெஞ்சையள்ளும் மனிதநேயம்

சொந்தப் பாதை நடையில் கவனமாய்

பந்தமெனும் பிற உறவுகளை அலட்சியமாய்

அந்தமென்பது தனிப்பாதை என்பதாய்

இந்த உலகு மாறிவிட்டது. 9-10-2021

00


இறைவனா   விதியா கர்மத்தின் நியதியா

விதி வலியது...மதிக்கும் கடமை யுண்டு

அழியும் வாழ்வு அழுகையைத் தள்ளிடு

பிறப்பில் தொடங்கி சிறப்பாய்க் கையிலெடு

திறப்பெனும் நம்பிக்கையை உறுதியாய் உயர்வாய்!


வேதா. இலங்காதிலகம்.  தென்மார்க்   25-5-2021

uploading     20-4-2025.






புதன், 16 ஏப்ரல், 2025

466 (1009) தோற்பன தொடரேல்

 


          





            தோற்பன தொடரேல்


தோல்விகள் தொடருமானால் பாதை மாற்றலாம்

வீழ்வதை விட்டு எழுந்து நடக்கலாம்.

ஆழ்ந்த தமிழைக் காணிக்கை ஆக்கலாம்.

சூழ்ந்திடும் நித்திய மகிழ்வு மலர்களாகலாம்.

00


கவிதைகளால் சிலைப்பது பரமானந்தம்

கவிதையை விரும்பாதோர் பலர்.

விதைக்கும் சொல்லும் பதிதானதாக

மகிழ்வு ஊட்டுமொரு புள்ளி.

00


எழுதுகோலின் அசைவு நேசத்திருவிழாவாகும்.

உழுதிடும் அறிவுப் போராகும்.

ஆன்மாவை  நீவும் மயிலிறகாகும்

பழுதாகாத பரிசுத்த  பயணமாகும்



00

பவிகமான(சிறப்பான)வாசிப்பு மகிழ்வை மலர்த்தும்.

பவிசுடைத்து மனிதன் உயர்வான்.

பழுதாகாத பவித்திரப் பயணம்.

பற்றுக்கோடாக மனிதனைப் பாதுகாக்கும்.

00


நிலாக்கவிஞர்  வேதா. இலங்காதிலகம்.  தென்மார்க்.  16-4-2025






ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

465 (1008) விசுவாவசு வருடமே!.....2025......

   


          


                     



                

  

                      விசுவாவசு வருடமே!.....2025......


இக்கரை நோக்கும் விசுவாவசு வருடமே

அக்கரை நோக்கும்  குரோதியே செல்க!...

புதுக்கரையோடு புதிய ஆண்டே பொலிக!

துன்பவரை துடைக்க அக்கறையோடு மலர்க!

ஏமாற்று வன்மம் துரோகம் அழியட்டும்!

தாமாற்றும் செயல்கள் நன்மையாகப் பிறக்கட்டும்!

00

அமைதிவாழ்வின் அச்சாரத்தோடு வருக! நன்று!

அன்பு நிறைந்து ஆதரவு பெருகட்டும்!

சர்க்கரையெனும் சமாதானம் நிறைந்தால்

நிர்க்கதியான பலர் வாழ்வு உயர்நிலையில்

அர்த்தமுடை புத்தாண்டுப் பால்சோறு படையல்

துர்க்காதேவி கர்த்தா யேசு புத்தன்  அல்லா ஆசியுடன்..

00

கவித்தாமரை  வேதா. இலங்காதிலகம்    தென்மார்க்.   2025



                                                   



வெள்ளி, 11 ஏப்ரல், 2025

464 (1007) நிமிர்ந்து நடவுங்கள்.

 


    



             


    நிமிர்ந்து நடவுங்கள்.

00

( தியக்கம் -அறிவுக் கலக்கம் மயக்கம். புனைமொழி - அலங்கார மொழி.

சுனைவு - சுரணை  முனிவுடை -முயற்சி.  அனையன் - அத்தன்மையன்.  வினைக்களம் - போர்க்களம்)

00

தயக்கம் பயமற்ற முயற்சிக்கு

தியக்கமழிய சுயமாய் நட

மயக்கமாக்கிக் கை பிடித்து

சுயகாலூன்றும் தடை விலக்கு.

00

புனை மொழியல்ல மனையறத்தில்

நினைப்பதைச் சாதிக்க மானுடன்

தினையளவும் தயங்க மாட்டான்.

அனைத்துமே  செய்யத் துணிகிறான்.

00

நினைவில் நீதியை ஒதுக்குவான்

பனைத்துணை சுயநலம் பிணைக்கிறான்.

சுனைவற்ற  முனிவுடை  அனையன்.

வினைக்களமிவன் வாழ்வு தான்.

00

(புதுச் சொற்களைத் தெரிந்து கொள்வதை விரும்புங்கள்.வெறுப்படையாதீர்கள்.)

வேதா. இலங்காதிலகம். தென்மார்க் -   11-2022



      



செவ்வாய், 8 ஏப்ரல், 2025

463 (1006) மௌனத்தின் மொழி யாரறிவார் இங்கே!

 


            



     



     குழுக்கள் முகநூலில் கவிதை கட்டுரைப் போட்டிகள் எனப் பலவகையில் செயற்படுகிறார்கள்.

சான்றிதழ்கள் - விருதுகள் எனப் பரிமாறுகிறார்கள். சிலர் இதைச் சரிவரச் செய்வதில்லை.
சுகவீனம் - பயணம் என்று தடைகள் நேர்வதுண்டு. நேயர்களின் எதிர் பார்ப்பு ஏமாற்றமாவதும் உண்டு.
இப்படி எழுதப்பட்ட கவிதை ஒன்று இது.
00

மௌனத்தின் மொழி யாரறிவார் இங்கே!
00
நினைத்தால் மௌனம் ஒரு மந்திரக்கல்
நினைத்த கருத்தில் நீந்த முடியும்
நினைத்தலில் ( தியானித்தலில்) உறுதியாய்த் தோன்றுவது பேரமைதி
அனைவருக்கும் மௌனம் ஒரு பாறாங்கல்லோ!
நனைந்திடலாம் கலை இசையின் மௌனத்தால்
00
துயிலாத போது மௌனம் பயங்கரம்
மயிலாடும் போது இரசனை இன்பம்.
கயிலாய மலையின் மௌனம் சிவாயநம.
ஓயிலாட்டத்தில் மௌனம் தொலைந்த மொழி
துயிலாடலில் மௌனம் அணைக்கும் மொழி.
00


வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் -27-7-2022
குழுமத்தின் விதிப்படி காத்திருந்தேன். இரண்டு வருடமாகிவிட்டது.
இனி இதை 8-4-2025 ல் முகநூலில் பிரசுரிக்கிறேன்.
அவர்கள் படத்தையும் மாற்றிவிட்டேன்.





ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

462 (1005) சான்றிதழ்க் கவிதைகள் - 4 சமூகத்தை மதித்திடு சுயமதிப்போடு வாழ்ந்திடு

 


                       



        


சான்றிதழ்க் கவிதைகள் -  4


சந்திரோதயம்   -  கவிவனம்.

00

தலைப்பு

சமூகத்தை மதித்திடு சுயமதிப்போடு வாழ்ந்திடு

00

சமூகத்ih மதித்திடு சுயமதிப்போடு வாழ்ந்திடு

சுமுகமான இன்மொழியே குமுகாய மந்திரம்.

துமுலம் (குழப்பம்) தரும் மதிப்பற்ற உறவாடல்

கொதிப்பை உருவாக்கும் அதிருப்தி நிறைக்கும்.

ஓட்டி உறவாடு கட்டி அணை

எட்டிச் செல்லாது தொட்டிலாகும் மன்பதை

00

அறம் வளர்க்கும் நெறியான பாதை

புறநிலை ஏகாது புகழாய் உயரும்

நற்சமூகம் தானாக நற்பேறு அடையும்

சிறுவரைப் பேணு! பொறுமை பெரிது!

வறுமை போக்க பசுமை காத்திடு!

வளமான உலகிற்கு இணையானது ஏது!

00

கவிஞர் திலகம் -  வேதா. இலங்காதிலகம்  தென்மார்க்   18-3-2025



         




            




செவ்வாய், 1 ஏப்ரல், 2025

461 (1004) படவரிகள் - 2

 


         



                           



                                  

                                   



                                 

          படவரிகள் - 2



உயிரெழுத்து.

உதடும் நாக்கும் இணையாது
உதவும் குரல் வளையால்
உதிக்கும் தமிழ் மொழி
உயிரில் பயிராகும் முதலெழுத்து.
00
குறில் நெடிலாக உள்ள
குறுகிய ஒலி அ.
நெடிய ஒலி ஆ.
உயிரெழுத்துகள் பன்னிரண்டு.
00
கவிவித்தகர் - வேதா. இலங்காதிலகம் - தென்மார்க். 1-4-2025






494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...