ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

467 (1010) திறப்பெனும் நம்பிக்கை.

 


        

     



                         


              திறப்பெனும் நம்பிக்கை.



காற்றோடு பேசும் மரம்

தோற்றிடுமோ பேசாத மரம்

ஆற்றோடு பேசும் கரை

ஊற்றோடு உருளும் கூழாங்கல்

ஆற்றொழுக்கால் அழகாக அமையும்.

00


நட்பை அழிக்கும் கொலைக்காடு.

உறவை அழிக்கும் வன்மக்காடு

பறவைச் சிறகொடிக்கும் உலகு

திறமை கண்டு பொறாமையால் எரியும்.

சிறந்தோர் மனவியல்அமைதியில் படியும்.

00


நெஞ்சையள்ளும் மனிதநேயம்

சொந்தப் பாதை நடையில் கவனமாய்

பந்தமெனும் பிற உறவுகளை அலட்சியமாய்

அந்தமென்பது தனிப்பாதை என்பதாய்

இந்த உலகு மாறிவிட்டது. 9-10-2021

00


இறைவனா   விதியா கர்மத்தின் நியதியா

விதி வலியது...மதிக்கும் கடமை யுண்டு

அழியும் வாழ்வு அழுகையைத் தள்ளிடு

பிறப்பில் தொடங்கி சிறப்பாய்க் கையிலெடு

திறப்பெனும் நம்பிக்கையை உறுதியாய் உயர்வாய்!


வேதா. இலங்காதிலகம்.  தென்மார்க்   25-5-2021

uploading     20-4-2025.






1 கருத்து:

  1. Kanagasegaram Vimalasegaram
    photo wish 21-4-2025
    Sujatha Anton
    இறைவனா விதியா கர்மத்தின் நியதியா
    விதி வலியது...மதிக்கும் கடமை யுண்டு
    அழியும் வாழ்வு அழுகையைத் தள்ளிடு
    பிறப்பில் தொடங்கி சிறப்பாய்க் கையிலெடு
    திறப்பெனும் நம்பிக்கையை உறுதியாய் உயர்வாய்! கருத்தாளம் மிக்க வரிகள் வளர்க தமிழ்" கவிதாயினி வேதா" 21-4-25

    Kugaananthaletchumy Ganeshan
    அருமை.அர்த்தமுள்ள அழகிய கவி.
    21-4-2025

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...