மொழிஊர்வல அற்புதம்
காற்றைத் தொட்டு கருமுகில் இழுத்து
நூற்றை எண்ணி நுழைந்து கட்டி
ஏற்றினேன் என்னாசைக் கவிப்பட்டம்
விசிறி இன்றி இரட்டைக் கொம்பு
விசிறாத முற்றுப் புள்ளி மறக்காத
வினைமுற்று என்றும் தமிழில் மறக்காதே
00
செழித்துத் தளிர்க்கும் கற்பனை
முளைத்தது நினைவுக் குமிழிகள்
நதி சுமந்து செல்லும் இரகசியமாய்
மகரந்த இறகுகள் காற்றினில்
மனித உணர்வுத் தொடுகையாய்
மொழி ஊர்வலமாகும் அற்புதம்.
00
சொல் வேலியில் காலிடறாது செல்ல
நல்லெழுத்து விமானத்தில் ஏறவேண்டும்
ஞாபகஅரும்பு உன்னதமாய் விரிய
உள்ளப் புணர்ச்சியின் வசனகாவியம்
காலச்சிகரமாய்க் கவிதை வாசகம்
தளிர் அடர்த்திய மரமாக அமைக்கலாம்
00
வரங்கள் இறைவனின் கொடை
தரங்கள் எமது திறமையென்பது
வாங்கி வராத இறைவனின் வரங்கள்.
ஏங்கும் ஆசீர்வாதங்களும் எம்முடன்
தங்கிடும் பேறுகளும் வாழ்வின்
மங்கலமும் நல்ல வரமே
கவி அரசி - வேதா. இலங்காதிலகம். தென்மார்க். 28-4-2025
Sasidevi Riise
பதிலளிநீக்கு👍👌👏👏👏🥰
28-4-2025
Manjula Kulendranathan
GIF- clapping hands
28-4-25
Sandradevi Thirunavukkarasu
Great
Vasantha VJ
மொழிக்குள் கருத்தரித்து கவியாய் பிரசவித்த கவியரசி
கவிதை கவிநயத்தின் மெருகை காலவரத்தின் தகமை மெய்ப்பட உரைத்த திறமை வாழ்த்துக்கள்.
படித்தும் சுவைத்தோம் பரவசமடைந்தோம். நன்றி
3d
Reply
Vetha Langathilakam
May be an image of text that says 'மகிழ்வுடன் நிறந்த அன்பும்! வேதா. இலங்காதில்கம்'
28-4-25
Janaki Sreenivasulu
Thank you ❤️❤️❤️💕🙏💕💕🙏💕
29-4-25
Sarvi Kathirithambi
வாழ்த்துக்கள் வேதா அக்கா
Vetha Langathilakam
பதிலளிநீக்குM.A. Ramamoorthy
வாழ்த்துகள்.
2-5-2025
Thirunavukkarasu Vimalanandan
சிறப்பு
2-5-2025