கவிதைப் பள்ளு - 1
எடுத்து வாசிக்க மனமில்லாமல் சமையல்
அடுப்போடு போராடும்பலருக்குக் கவிதையேன்!
அடுத்து அடுத்து எழுதிக் குவித்தாலும்
படுத்துச் சாய்ந்து கட்டிலே கதியாகிறார்
வீட்டிலே சோர்ந்து இருக்காது சிலர்
பாட்டிலே வரிவரியாய் எமுதிக் குவிக்கிறார்.
00
கருத்துடை வரிகளை அழகாக எழுதி
உருத்துடன் பெறுமதி நூலாக்குகிறார்
நெஞ்சில் முட்டி மோதும் உணர்வை
கொஞ்சு தமிழில் கோர்த்து மீட்கிறார்.
அஞ்சாது போட்டிகளில் எழுதிக் குவித்து
அருத்தமுள்ள விருதுகள் அளவின்றிப் பெறுகிறார்.
00
எங்கும் நூல்களைப் பரப்பி விதைக்கிறார்
எடுப்பார் இல்லையெனில் இலவசமாய் விதைக்கிறார்.
கருத்து மலைகள் உயராவிடினும் முயற்சியால்
விருப்போடு நற்கருத்துகள் பொங்குகிறது
கருத்துகள் மளமளவெனத் தளிர் விடுகிறது
குறுஞ் சிரிப்புடன் கவித்தளிரிற்கு உரமிடுகிறார்.
00
கவி நறுமணத்தில் உயர்ப்புறும் சவடுகள்
கடந்து போவதில்லை மனது நிறையும்.
கங்கு கரையின்றிக் கடலாகப் பொங்கும்
கடவுள் தந்த வாழ்வுப் புத்தகத்தில்
மொழியால் கவிப்பள்ளு வரைகிறேன்
அழியாத மடிப்புகளாய் மிதக்கும் சிறகுகளாய்.
கவியருவி - வேதா. இலங்காதிலகம். - தென்மார்க் -7.5.2025
Kanagasegaram Vimalasegaram
பதிலளிநீக்கு14-5-2025- clapping hands- super