வாசிக்க மனிதநேயம் தேவை
என் தொடுகையால் வெற்றுக் காகிதம்
இன் கவிதையால் நிறைகிறது.
எழுத்தியக்கம் ஓயாதது எவர்
இழுத்து அணைப்பாரோ உதறுவாரோ
கழுத்தில் அணிந்த எழுதுகோல்
எழுதும் எழுதும் எழுதும்.
00
நான்; எழுதும் போது
என்மீது நடனமாடும் மகிழ்வு
பிரசுரிப்பால் தோகை விரிக்கும்.
இரசவாத எழுத்தை மதித்து
பரிகசிக்காது மேலும் எழுத
உரசும் ஆர்வம் முயற்சி.
00
யாசிக்காது முதிர்ந்து மலர்ந்த
பூசிக்கும் மலராகப் பொழிந்து
தூசி அடக்கும் மழையாகப்
பாசி விலக்கும் கருத்துகள்
வாசிக்க அன்பு ஆழமான
மனிதநேயம் தெளிவு தேவை.
00
கவியூற்று – வேதா. இலங்காதிலகம். தென்மார்க் -4-5-2025
Janaki Sreenivasulu
பதிலளிநீக்குஆழமான.அன்பு வணக்கம்
may-4-2025