பாடுபொருள் இப்பிரபஞ்சமே
அழுத்துபவை அருமைக் கருவாக
விழுத்திடத் தடைகளற்ற விதானத்தில்
எழுத்து வானிலெடுத்துக் காட்டாய்
முழுநேரமாய் மூழ்கி நீந்த
முனைப்பாயெழுகிறது மனம் ஆவலாய்
00
அலங்காரப் பேச்சை உள்ளெடுத்தாலும்
அறிவான செயல் சுயமாகட்டும்
அற்புத ஞானவெண்ணங்கள் நிறைந்து
அளவற்றுத் ததும்பும் உணர்வுகளை
அக்கறையாய் உலகுயர அமைத்திடலாம்.
00
வாழ்த்துங்கள் ஞானவுரை வானளாவ
வாக்குநயம் வாக்குமூலம் வாசனை
வராத வாசக வாசனையாளர்கள்
வாமன மனமும் வளமற்றதாயினும்
வாழ்க! நீடு வளமுடன்!
00
விரல்கள் வடிக்கும் திறன்
விரிபுவி உலகெலாம் விண்ணெட்டட்டும்
வசிப்பது எங்கே ஆயினும்
வலுவுடன் அமை வார்த்தைகளை.
வரலாறு ஆகட்டும் வனப்புடன்.
00
பாடுபொருள் இப் பிரபஞ்சமே
கூடுதலாய் வேறெது கூடும்!
நாடும் நலிவற்ற ஏகமான (ஒப்பற்ற)
ஏற்றமிகு ஞானமும் ஏற்புடைத்தாகணும்
ஏறப் பறத்தலாகப் பிரவகிக்கட்டும்.
வேதா. இலங்காதிலகம். தென்மார்க் 29-8-2021
Vetha Langathilakam
பதிலளிநீக்குஎங்கோ ஒரு இணையத்தளத்தில் இக்கவிதை பதியப்பட்டிருந்தது.
எனது இணையங்களில் தேடினால் இது பதியப்பட வில்லை.
அதனால் பழைய படத்துடனே போட்டுள்ளேன். அலட்சியப் படுத்தப்படாத பூபாளம் அல்லவா!
24-5-2025
Ponnambalam Ramanathan
photo wish
Sujatha Anton
அலங்காரப் பேச்சை உள்ளெடுத்தாலும்
அறிவான செயல் சுயமாகட்டும்
அற்புத ஞானவெண்ணங்கள் நிறைந்து
அளவற்றுத் ததும்பும் உணர்வுகளை
அக்கறையாய் உலகுயர அமைத்திடலாம். அழகான கவிநயம் வாழ்க தமிழ் கவிதாயினி வேதா
25-5-2025
Sujatha Anton
bsautifulll pic.