புதன், 14 மே, 2025

473 (1016) அலைகள் ஓயாது

 

        


     


          அலைகள் ஓயாது


எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள்!

சுத்தமாய்த் துடைத்து அழித்தல்கள்!

கெத்தாகவே! சுயச் சோர்வில்லை

நித்தமும் சலிப்பின்றிச் சாதனையே!

பித்தமேறினால் கனவுகளுக்குத் திரையிடுவதா!

சித்தத்தில் உரம் நேர்மையுடன்

மொத்தமாய்த் தலை நிமிரலாம்

சத்தாகப் பூரணமாய் ஆக்கவினையாற்றலாம்.

00

ஏமாற்றும் அலைகள் ஓயாது

நீமாற்றி நான் மாற்றியது

கால் மாற்றி பாறையில்

மோதிட எத்தனிக்கும் பாவனையே

நெஞ்சம் பாறை  அல்லவே!

கொஞ்சம் நசுங்கி  விம்மும்

மஞ்சமல்ல வாழ்வுப் பயணம்!

பஞ்சமல்ல போர் நிலவரம்!

00

கவி நட்சத்திரம் - வேதா. இலங்காதிலகம் 10 டென்மார்க் - 14-9-2021


     



        





1 கருத்து:

  1. Rathy Mohan
    அலைகள் ஓய்வதில்லை
    2023

    Rathy Mohan replied

    2 Replies
    Subajini Sriranjan
    அழகான கவிதை
    2023
    Sarala Vimalarajah
    ஆழமான வரிகள் அக்கா
    Kannadasan Subbiah
    அருமை சகோதரி
    2023
    Rasamalar Jeyam
    சிறப்பு பாராட்டுக்கள்

    Rama Sampanthan
    நெஞ்சம் பாறை அல்லவே
    கொஞ்சம் நசுங்கி விம்மும் !
    மஞ்சமல்ல வாழ்வுப் பயணம்
    பஞ்சமல்ல போர் நிலவரம் ! சிறப்பான வரிகள்
    2023
    Sivaneswary Sivarasah
    சிறப்பு. அருமையான ஒளிப்படமும்
    2023
    Rasamalar Jeyam
    கவிதை அருமை

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...