புதன், 16 ஏப்ரல், 2025

466 (1009) தோற்பன தொடரேல்

 


          





            தோற்பன தொடரேல்


தோல்விகள் தொடருமானால் பாதை மாற்றலாம்

வீழ்வதை விட்டு எழுந்து நடக்கலாம்.

ஆழ்ந்த தமிழைக் காணிக்கை ஆக்கலாம்.

சூழ்ந்திடும் நித்திய மகிழ்வு மலர்களாகலாம்.

00


கவிதைகளால் சிலைப்பது பரமானந்தம்

கவிதையை விரும்பாதோர் பலர்.

விதைக்கும் சொல்லும் பதிதானதாக

மகிழ்வு ஊட்டுமொரு புள்ளி.

00


எழுதுகோலின் அசைவு நேசத்திருவிழாவாகும்.

உழுதிடும் அறிவுப் போராகும்.

ஆன்மாவை  நீவும் மயிலிறகாகும்

பழுதாகாத பரிசுத்த  பயணமாகும்



00

பவிகமான(சிறப்பான)வாசிப்பு மகிழ்வை மலர்த்தும்.

பவிசுடைத்து மனிதன் உயர்வான்.

பழுதாகாத பவித்திரப் பயணம்.

பற்றுக்கோடாக மனிதனைப் பாதுகாக்கும்.

00


நிலாக்கவிஞர்  வேதா. இலங்காதிலகம்.  தென்மார்க்.  16-4-2025






1 கருத்து:

  1. Thirunavukkarasu Vimalanandan

    Rising contributor
    அருமை
    நல்லா இருக்கு
    16-4-2025
    Vetha Langathilakam
    Author

    Top contributor
    Thirunavukkarasu Vimalanandan மனமார்ந்த நன்றி.
    வாழ்க வளமுடன்.!!!!!.
    16-4-2025
    M.A. Ramamoorthy
    Admin
    Group expert in Virtual Reality
    அருமை.... வாழ்த்துகள்.
    1d
    Reply
    Vetha Langathilakam
    Author

    Top contributor
    M.A. Ramamoorthy மனமார்ந்த நன்றி.
    வாழ்க வளமுடன்.!!!!!.
    16-4-2025

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...