நிமிர்ந்து நடவுங்கள்.
00
( தியக்கம் -அறிவுக் கலக்கம் மயக்கம். புனைமொழி - அலங்கார மொழி.
சுனைவு - சுரணை முனிவுடை -முயற்சி. அனையன் - அத்தன்மையன். வினைக்களம் - போர்க்களம்)
00
தயக்கம் பயமற்ற முயற்சிக்கு
தியக்கமழிய சுயமாய் நட
மயக்கமாக்கிக் கை பிடித்து
சுயகாலூன்றும் தடை விலக்கு.
00
புனை மொழியல்ல மனையறத்தில்
நினைப்பதைச் சாதிக்க மானுடன்
தினையளவும் தயங்க மாட்டான்.
அனைத்துமே செய்யத் துணிகிறான்.
00
நினைவில் நீதியை ஒதுக்குவான்
பனைத்துணை சுயநலம் பிணைக்கிறான்.
சுனைவற்ற முனிவுடை அனையன்.
வினைக்களமிவன் வாழ்வு தான்.
00
(புதுச் சொற்களைத் தெரிந்து கொள்வதை விரும்புங்கள்.வெறுப்படையாதீர்கள்.)
வேதா. இலங்காதிலகம். தென்மார்க் - 11-2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக