ஞாயிறு, 30 டிசம்பர், 2018

8 (597) . விகசிக்கட்டும் விக்கினமற்ற காலம்.







விகசிக்கட்டும் விக்கினமற்ற காலம்.


போது ஆகி மலர்ந்த ஆக்கங்கள்

ஏதுவான நூலாகிச் சிறகு விரிக்க

பாதுகாப்பாய் கவிதைப் பயணம் ஊர்ந்திட 

சூதுகளும் ஒரு பக்கம் புரண்டது.


போதும் என்று கூற முடியாது

சாதுவாக என் பயணமும் செல்ல

சாதுரியமாய் இரண்டாயிரத்துப் பதினெட்டு காற்றாடியாகி

தோதுடையதான மயக்கத்தில் முடிவாகிறது... செல்லட்டும்!..


இனியவைக்கும் இறைவனுக்கும் உதவியோருக்கும் நன்றி

கனியட்டும் மிக உன்னதப் புத்தாண்டு!

எனியோரு நித்தியமான சத்தியமான காலமாய்

குனிவில்லா அரசியல் செழித்துத் தளைக்கட்டும்.


நிம்மதி ஆனந்தம் அமைதி ஒன்றாகி

எம்மதமும் சம்மதமான சமாதானம் திரளட்டும்

விம்மும் மனங்கள் கொண்டாடும் நிலைபெறட்டும்.

விரியட்டும் இரண்டாயிரத்துப் பத்தொன்பது இன்பமாக


வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 30-12-2018





சனி, 29 டிசம்பர், 2018

7. (596) (ஊடகம் - ஜீவநதி - சந்தனத் தமிழ்



ஜீவநதி - இலங்கைச் சஞ்சிகையில் எனது கவிதை
2019 - சித்திரை. மனமார்ந்த நன்றி குழுவினருக்கு.
சந்தனத் தமிழ்..
சுந்தர விழிகளில் சுகமுணர
அந்தரமழிய அறிவுத் தாகமும்
மந்திரமான ஞானத் தாகமும்
முந்திக் குதிக்கும் யன்னலைத் திற!
சந்தன வாசமாய்த் தமிழ்
செந்தூரமாய் உருகி ஓடும்.
உயிர் உணர்வு விரிந்த
உன்னத வீச்சு எழுதியும்
என்றும் தீராத தமிழ்
வன்மமான ஆணவ ஆணிகள்
சின்னதான அலட்சிய நாணயங்கள்
பின்னி அழியாத தமிழ்.
மனம் நுகரும் பரவசங்கள்
கனமின்றி உயர்ந்து மிதந்து
மனப்புதர் தாவியது துயில.
சினமின்றிப் பவளப்படுகைப் பரணில்
தனமாம் பவளம் முத்துகளுடன்
இனம்புரியா அமைதி கண்டது.
10-3-18






வெள்ளி, 28 டிசம்பர், 2018

6 (595) உயிர் கரையும் உண்மை!...









உயிர் கரையும் உண்மை!...

தானமல்ல உயிர் கரையும் வாழ்விது!

ஞானம் முதிர்வில் பூக்கும் முத்தொளி!
வானமாய் விரிந்து அறிவினால் உயர்தல்
ஊனம் கரைந்து உன்னதம் பெறுதல்!
கானம் அன்பானால் களித்து உறங்கலாம்.


சடமாய் முகமூடியிட்டு -நான்- அழித்து

இடமின்றி சுயம் எகிறிட நிழல் 
தடத்தில் சிறகு ஒடித்த வாழ்வேன்!
முடமற்று நினைவுக் கேணி நிறைத்து
படம் விரித்து பரவச திறமையள்ளு!


மரம் முதிர பழங்கள் பெறுதலாய்

மனம் முதிர அறிவொளி பரவும்.
சினம் கலந்து சீர் கெடுதல் அவம்!
மனம் ஒரு இளமை மாளிகை
புனலாய் சாரல் தமிழ் தெளி!


பாசத்தின் மென்மை நிழல் ஏன்

வாசமாய்ப் படிவதில்லை சிலர் மனதில்!
கூசாது நல்ல நினைவுகளை உலரவிட்டால்
நேசத்தால் இதயக் கிண்ணம் வழியும்!
விசம் கக்குவோர் ஆற்றாமை கொண்டோரே.


வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 29-12-2018

சனி, 22 டிசம்பர், 2018

5 (594) புரியாத புதிர்





புரியாத புதிர்


பல விடயங்கள் புரியாத புதிராகும்
பொல பொல கண்ணீர், பணம்
பலமான நல்ல நோட்டா கள்ளமா
நிலை புரியவில்லை யாவும் புதிர்!

தொலை பேசி இல்லாத காலத்திலும்
நிலையாக மனிதன் வாழ்ந்தான் அன்று.
தொலை பேசியின்றி மனிதன் இன்று
மூச்சுவிட மறப்பது புரியாத புதிர்!

அன்பாகப் பேசினும் அருகு வரார்
அகம் திறக்காது எத்தனை மனிதர்!
அவர் எதனை நம்மிடம் எதிர்பார்க்கிறார்
அனைத்தும் எனக்குப் புரியாத புதிர்!

அதிர வைக்கும் படம், காமம்
கொப்பளிக்கும் படமும் வரிகளும்,
தன் முகத்தை பெயரை மறைப்பதும்
மனநோயா என்பது புரியாத புதிர்!


வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 13-6-2016

வியாழன், 20 டிசம்பர், 2018

4 (593) அன்புலகத் திறப்பை எடு!








அன்புலகத் திறப்பை எடு! எண்ணிப் பாருங்கள் மரபின் வண்ணம் மாண்புடை தண்மையாலுயர்ச்சி! கண்ணிய மனிதருடன் நிச்சயம் மனிதநேயக் கலவையின் தொகுப்பு பண்பான பெற்றோர் பாட்டிமாருமுளர்! வழியட்டும் அன்பு மொழிகள். புனித இலைத்துளிரின் மதிப்பு வனிதமான இதயக் கிண்ணத்தால் திலகமாய் இலங்கட்டும் இதயம்! உலகில் தூவும் மொழியை கலக மொழியின்று விசிறு! விலகாமல் அன்பில் கரை! பூவாணமாய் ஆனந்த ஊற்றாயிரு! உலராது ஆதரவால் காத்து மலராக மொழியால் மலர்த்து! பலராலும் நேசிக்கும் பாச புருவமுயர்த்த வாழ்ந்திடு சிறப்பு! சருகாம் இலட்சியம்இ நிராகரிப்பினுள் பெருவனமாம் அன்புலகச் சாவியொழிப்பு! ஒரு முறையே பிறப்பு 1-12-2018





புதன், 19 டிசம்பர், 2018

3 .(592). நீதியை மதிக்கும் பாதை .











நீதியை மதிக்கும் பாதை ...

சேரும் இடம் எது! நாம் சேராத இடம் எது இவ்வுலகில்! இனம் இனத்தைச் சேரும் என்றும் குணம் குணத்தைச் சேரும் என்பார் மனிதத்தின் நேசன் சேரும் இடமெது! மனிதநேயம் வாழும் இடம் அன்றோ! தீராத ஆற்றாமைத் தீயில் வேகும் தேறாத மனித உள்ளங்கள் நாளும் நூறாக வெள்ளை உள்ளத்தை உடைப்பார் சாறாக நல்ல உள்ளத்தைப் பிழிவார் சீராக இல்லா அழுக்கு உள்ளங்களே சேராத இடம் என்று கொள்ளுங்களே! கூறாக மக்களைக் கூடிப் பிரிவதுவும் சேறாக மனிதத்தை ஆக்குவதும் வெறும் நீறாகும் வாழ்வில் உறுதியாக நிலைத்திடாது ஆறாகும் வாழ்வில் அரசு ஆளாது. அனைத்திலும் மகாசக்தியால் எம் வண்ணமது அணு அணுவாயளப்பது மறக்க வொண்ணாதது. சேருமிடம் ஒருவன் சரியாகச் சேர்ந்திருந்தால் வராத மக்கள் தொகையிறுதி அஞ்சலிக்கு பாராத மக்கள் தொகை கூடிடுமா! சேராத இடம் ஒருவன் சேர்ந்திருந்தால் ஆராதிப்பாரோ ஒருவரை இறுதி அஞ்சலியில்! நேரதே பூவுலகில் இந்நிலை ஒருவனுக்கு! நீதியை மதிக்கும் வாழ்வு பாதிப்பாகாது போதிமரம் தேவையற்ற பாதை இது!
5-10-2002
(இலண்டன் ரைம் வானொலி ரிஆர்ரி கவிதை நேரத்தில் வாசிக்கப்பட்டது.)

2 அது பாரும் அந்தக் காலம்! (591)










3. அது பாரும் அந்தக் காலம்!

பசும் புற்தரையில் பசுமை மரச் சோலையில் பறவைகள் ஒலியில் நறவு ஒளி நிலவில் தங்க கதிர் வயலிலே தாரையாய் பொழிதலில் எங்களினச் சூழலில் தங்கத் தமிழ்ச் சோலையில்
தந்தை தொழிற்சிந்தை தாய் வீட்டுப்பணியில் நீந்த சேய்கள் சிறந்த ஆடை வயிற்றுக்குச் சுவையுணவு உய்த்து உருவாகி உணர்ந்தது நாம் உயர்ந்தது மெய் அது பாரும் பழமைக் காலம்
ஏரும் வயலுமாய் பேரும் சீரும் சார்ந்த நாள் கணனிரசனை வனப்பில் பணத்தில் மிதக்கும் கனவில் நினைத்தது நடக்குமிப்புலத்தில் நீந்தும் வெள்ளைகள் கூட்டினில் மேய்ந்து வாரிசுகள் சிக்கிடாது ஆய்ந்த மனவியலாளர் வரையோடு
அருகிலிருந்து பார்த்து அணைத்து வாரிசை வளர்த்து நினைத்துத் திகிலுடன் அனைத்துமிது புலம்பெயர் கோலம். எது நேருமென எப்போதும் நிதம் சோரும் மனம் பாரும் அந்தக் காலமோ இந்தக் காலமோ சொந்தமாய் கோருவதொரு இன்பக் காலம்! இனிய காலமே!
13-10-2002 (இலண்டன் ரைம் ரிஆர்ரி வானொலியில் வாசித்தது.)

செவ்வாய், 18 டிசம்பர், 2018

1.. (590) நட்பா அன்றிப் புகையா!







நட்பா அன்றிப் புகையா!

உன் நட்பு  திராட்சைப் பழமானது நண்பா
உன் புகை என் மூச்சடைக்கிறதே  ஏனப்பா
உன் நட்பே வேண்டும் புகையல்ல நண்பா
நன்கு முடிவெடு! தெரிவு உன்னது நண்பா!

நுரையீரல் நிறைக்கும் உன் புகை வளையம்
நுரையீரல் எரிக்கும் உன் புகைப் பழக்கம்
கரையோர மனிதனுக்கும் மூச்சை அடைக்கிறது
இரையாகிறாய் நீ பிறருக்கப் பாதிப்பு ஏன்!

கரைகாணும் வாழ்விற்குப் பெரும் துன்பத்
திரை புகையாகி வீணாகிறதே நண்பா!
தரையில் காலூன்றித் தானே நிற்கிறாய்
விரைவாக வாழ்வை ஏன் குறுக்குகிறாய்!

நட்பா அன்றிப் புகையா! வுpழிப்பணர்வு கொள்!
நந்தவன வாழ்வின் நலம் பேணிக்கொள்!
தீயவை வாழ்விற்குத் தீக்குச்சியாகிறது கொள்!
தீங்கனியாக்கு எமதுநட்பைத் திருவாகக் கொள்!
தீயதை விலக்கிடல் வாழ்விற்குத் தீபாராதனை!
தீர்க்கமான முடிவைத் தெரிவு கொள்!

23-3-2004





01. தகவல் ( ) -














494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...