வியாழன், 20 டிசம்பர், 2018

4 (593) அன்புலகத் திறப்பை எடு!








அன்புலகத் திறப்பை எடு! எண்ணிப் பாருங்கள் மரபின் வண்ணம் மாண்புடை தண்மையாலுயர்ச்சி! கண்ணிய மனிதருடன் நிச்சயம் மனிதநேயக் கலவையின் தொகுப்பு பண்பான பெற்றோர் பாட்டிமாருமுளர்! வழியட்டும் அன்பு மொழிகள். புனித இலைத்துளிரின் மதிப்பு வனிதமான இதயக் கிண்ணத்தால் திலகமாய் இலங்கட்டும் இதயம்! உலகில் தூவும் மொழியை கலக மொழியின்று விசிறு! விலகாமல் அன்பில் கரை! பூவாணமாய் ஆனந்த ஊற்றாயிரு! உலராது ஆதரவால் காத்து மலராக மொழியால் மலர்த்து! பலராலும் நேசிக்கும் பாச புருவமுயர்த்த வாழ்ந்திடு சிறப்பு! சருகாம் இலட்சியம்இ நிராகரிப்பினுள் பெருவனமாம் அன்புலகச் சாவியொழிப்பு! ஒரு முறையே பிறப்பு 1-12-2018





2 கருத்துகள்:

  1. கவிதை வரிகள் மிகவும் சிறப்பு சகோ.

    (தளத்தில் ஃபாலோவர் லிங்க் அமைக்கவும்)

    அன்புடன்
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. Sj Siva :- அருமை அக்கா
    1 -12-2018

    Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன் மகிழ்வு சகோதரி

    Vetha Langathilakam Subi Narendran :- நன்றி.
    1-12-18



    Subi Narendran //உலராது ஆதரவால் காத்து மலராக மொழியால் மலர்த்து! பலராலும் நேசிக்கும் பாச பூவாணமாய் ஆனந்த ஊற்றாயிரு// என்ன அழகான வரிகள். கவிதை மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள். 1-12-2018

    Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வு சகோதரி.
    வக்கிர மனங்கள் பள்ளத்திற்கிழுக்க
    உக்கிர வேகம் உற்சாகமாய்
    எக்குதலாக, எழிலான தமிழ்
    பக்கம் விரிந்து பூந்திரியாகிறது.
    (எக்குதல் - குவிதல், எட்டுதல், ஊடுருவல்)



    Rathy Mohan :- ஒரு முறையே பிறப்பு புருவமுயர்த்த வாழ்ந்திடு சிறப்பு... அருமை மா..

    Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வு சகோதரி. Rathy...

    Balakrishnan Asokan:-- Pleasant words
    1 - 12- 2018

    Vetha Langathilakam :- Thank you



    Ashok MA Mphil :- எல்லையில்லா மகிழ்வினில்
    இந்த நொடியில்
    நின்…மகன்
    அஷோக்.

    Vetha Langathilakam :- Nankalum....Anantham..


    James Gnanenthiran :- அன்புலகச் சாவி தேடும்
    என்னருமை நண்பியே
    அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்?

    Vetha Langathilakam sati thaan.. thola....



    Sujatha Anton :- உலகில் தூவும் மொழியை
    கலக மொழியின்று விசிறு!
    திலகமாய் இலங்கட்டும் இதயம்!
    விலகாமல் அன்பில் கரை!
    நிறைந்த கருத்து. வாழ்க தமிழ்.!!!!
    2019

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு