சனி, 29 டிசம்பர், 2018

7. (596) (ஊடகம் - ஜீவநதி - சந்தனத் தமிழ்



ஜீவநதி - இலங்கைச் சஞ்சிகையில் எனது கவிதை
2019 - சித்திரை. மனமார்ந்த நன்றி குழுவினருக்கு.
சந்தனத் தமிழ்..
சுந்தர விழிகளில் சுகமுணர
அந்தரமழிய அறிவுத் தாகமும்
மந்திரமான ஞானத் தாகமும்
முந்திக் குதிக்கும் யன்னலைத் திற!
சந்தன வாசமாய்த் தமிழ்
செந்தூரமாய் உருகி ஓடும்.
உயிர் உணர்வு விரிந்த
உன்னத வீச்சு எழுதியும்
என்றும் தீராத தமிழ்
வன்மமான ஆணவ ஆணிகள்
சின்னதான அலட்சிய நாணயங்கள்
பின்னி அழியாத தமிழ்.
மனம் நுகரும் பரவசங்கள்
கனமின்றி உயர்ந்து மிதந்து
மனப்புதர் தாவியது துயில.
சினமின்றிப் பவளப்படுகைப் பரணில்
தனமாம் பவளம் முத்துகளுடன்
இனம்புரியா அமைதி கண்டது.
10-3-18






1 கருத்து:

  1. Stella Paulraj :- அருமை

    Nagalingham Gajendiran :- vazhthugal.

    Nagalingham Gajendiran
    👏👏👏

    Selvi Yokarajah :- valthukkal

    Kasirajalingam Jeevalingam Yarlpavanan:- சிறப்பு, பாராட்டுகள்

    Rukmani Rk :- Vazhthukkal

    Sakthi Sakthithasan :- வாழ்த்துக்கள்



    Rathy Mohan :- வாழ்த்துகள்மா

    Shanthy Bala :- வாழ்த்துக்கள் சகோதரி.
    2019
    Subi Narendran:- வாழ்த்துக்கள்.
    2019
    KP Logathas :- நல்வாழ்த்துக்கள்
    2019
    Paval Rajadurai :- வாழ்த்துக்கள்.
    2019
    Sujatha Anton :- வாழ்க!!! வளர்க தமிழ்!!!
    2019

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு