செவ்வாய், 18 டிசம்பர், 2018

1.. (590) நட்பா அன்றிப் புகையா!







நட்பா அன்றிப் புகையா!

உன் நட்பு  திராட்சைப் பழமானது நண்பா
உன் புகை என் மூச்சடைக்கிறதே  ஏனப்பா
உன் நட்பே வேண்டும் புகையல்ல நண்பா
நன்கு முடிவெடு! தெரிவு உன்னது நண்பா!

நுரையீரல் நிறைக்கும் உன் புகை வளையம்
நுரையீரல் எரிக்கும் உன் புகைப் பழக்கம்
கரையோர மனிதனுக்கும் மூச்சை அடைக்கிறது
இரையாகிறாய் நீ பிறருக்கப் பாதிப்பு ஏன்!

கரைகாணும் வாழ்விற்குப் பெரும் துன்பத்
திரை புகையாகி வீணாகிறதே நண்பா!
தரையில் காலூன்றித் தானே நிற்கிறாய்
விரைவாக வாழ்வை ஏன் குறுக்குகிறாய்!

நட்பா அன்றிப் புகையா! வுpழிப்பணர்வு கொள்!
நந்தவன வாழ்வின் நலம் பேணிக்கொள்!
தீயவை வாழ்விற்குத் தீக்குச்சியாகிறது கொள்!
தீங்கனியாக்கு எமதுநட்பைத் திருவாகக் கொள்!
தீயதை விலக்கிடல் வாழ்விற்குத் தீபாராதனை!
தீர்க்கமான முடிவைத் தெரிவு கொள்!

23-3-2004





1 கருத்து:


  1. Subi Narendran
    'நட்பா அன்றிப் புகையா' புகைத்தலுக்கு விழிப்புணர்வு தரும் கவிதை. வாழ்த்துக்கள்.
    1-9-2020
    Vetha:- Mikka nanry sis

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு