வெள்ளி, 28 டிசம்பர், 2018

6 (595) உயிர் கரையும் உண்மை!...









உயிர் கரையும் உண்மை!...

தானமல்ல உயிர் கரையும் வாழ்விது!

ஞானம் முதிர்வில் பூக்கும் முத்தொளி!
வானமாய் விரிந்து அறிவினால் உயர்தல்
ஊனம் கரைந்து உன்னதம் பெறுதல்!
கானம் அன்பானால் களித்து உறங்கலாம்.


சடமாய் முகமூடியிட்டு -நான்- அழித்து

இடமின்றி சுயம் எகிறிட நிழல் 
தடத்தில் சிறகு ஒடித்த வாழ்வேன்!
முடமற்று நினைவுக் கேணி நிறைத்து
படம் விரித்து பரவச திறமையள்ளு!


மரம் முதிர பழங்கள் பெறுதலாய்

மனம் முதிர அறிவொளி பரவும்.
சினம் கலந்து சீர் கெடுதல் அவம்!
மனம் ஒரு இளமை மாளிகை
புனலாய் சாரல் தமிழ் தெளி!


பாசத்தின் மென்மை நிழல் ஏன்

வாசமாய்ப் படிவதில்லை சிலர் மனதில்!
கூசாது நல்ல நினைவுகளை உலரவிட்டால்
நேசத்தால் இதயக் கிண்ணம் வழியும்!
விசம் கக்குவோர் ஆற்றாமை கொண்டோரே.


வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 29-12-2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...