ஞாயிறு, 10 நவம்பர், 2019

218.. (787 ) செம்புலம் சஞ்சிகை - கோப்பாய்க் கோட்டை....




கோப்பாய் செம்புலம் சஞ்சிகை உள்ளே....




இந்த மலரில் கோப்பாய்க் கோட்டை பற்றிய எனது...வரிகள்-








கோப்பாய் கோட்டை. கோப்பாயில் கோட்டையா! வியப்பு! உண்மை! எப்பக்கம் உள்ளது! பார்த்தீர்களா! அறிவோம்! செப்புவேன்! செங்கற் கோட்டையல்ல! அகழி சுற்றுச் சுவர் கொண்டதல்ல. செப்பரியதே! கற்பனை, கனவு, காதற் கோட்டையல்ல ஒற்றுமை செழிக்காத துரோகத்தின் அடையாளம். அற்புத நிர்வாக அரச இராசதானியின் உற்சாக ஆட்சியின் பாதுகாப்பு அரண். அற்றைநாளின் தமிழின சரித்திர ஆதாரம். ஓற்றுமையுடைந்த காட்டிக் கொடுப்பால் பறங்கியர் எற்றுதலாகி அழித்திட்ட பழைமைக் கோட்டையிது. நல்லூரிராசதானி உப தலைநகராக கோப்பாயிருந்ததாம். கோப்பாய் கோட்டை பெருமைக்கு உரியது கோ - என்றால் அரசன் என்றும், பாய் - என்றாலிருப்பிடம் என்று கோப்பாய் அரசனின் இருப்பிடமெனும் அரிய கருத்துண்டு. கோப்பாய் பதி யாழ் - பருத்தித்துறைவீதியில் பாய் விரித்ததாகவிரு பக்கமும் பதினெட்டு சதுரமைல். கடல் மட்டத்திலிருந்து இருபதடி உயரம் கிழக்கே செம்மணிக்கடல், வடக்கே நீர்வேலி தெற்கே நல்லூர், திருநெல்வேலி உடன் மேற்கே கோண்டாவில் இதன் எல்லைகளாகும். கோப்பாய் சந்தியின் வடக்கேயிருநூறு யாரிற்கு அப்பால் நீராடு தடாகமும் கோட்டையுமிருந்ததாம். இலங்கையினிறுதித் தமிழரசர் ஆரிய சக்கரவர்த்தி இலங்கிய காலத்தில் புகழ் பெற்ற இராசதானியாக நல்லூர் சிறப்புப் பெற்றது. நல்லூரின் பாதுகாப்பரணாக உப அரசாக வல்லவொரு பதியாக கோப்பாய் மிளிர்ந்தது. நல்லூர் . கோப்பாய் கோட்டைக்கு சுரங்கப்பாதையுமிருந்ததாம். கோட்டை அழிந்திப்போது கற்கள் துருத்தியபடியுள்ளதாம் குதியடிக் குளமென்பது நீராடுதுறைப் பெயராம். சங்கிலியன் செகராசசேகரன் சிறையிலிருந்து தப்பி சுரங்கப் பாதையூடாகக் கோப்பாய் கோட்டையையடைந்தானாம். காக்கை வன்னியன் சூழ்ச்சியால் சங்கிலியன் பிடிபட்டான். நல்லூர் மந்திரிமனையிலிருந்து தூர்ந்தநிலையில் சுரங்கமாம். சங்கிலியனை கோவாவிற்கு அழைத்துச் சென்றனர். நல்லூர் கோப்பாய் கோட்டைகளை பறங்கியரிடித்தனர். அரசனடிக்கடி வந்து தங்குமிடமான கோப்பாய் கோட்டை ஆதி சரித்திர முக்கியத்தின் எச்சமே தெற்கு எல்லைக் கோட்டை வாய்க்காலே இன்று பழைய கோட்டை நினைவுச்சின்னமாகிறது. நல்லூரின் யமுனா ஏரி போன்றே குதியடிக்குளமும் இங்கு நீராடு தடாகமானது. அழிந்து மண்ணுளாழ்ந்த கோப்பாய் கோட்டை காலத்தில் தனிச் சிறப்புப் பெற்றது. குதியடிக் குளம் 1955ல் ஆழமாக்கப்பட்டதாம். அமிழ்ந்தவை ஆராய்வோடு வெளியுலகிற்கு வரவேண்டும். வேதா. இலங்காதிலகம். (பெட்டகோ) டென்மார்க். ஆவணி. 2017 ஓய்வுபெற்ற முன் பாடசாலை ஆசிரியர்.




3 கருத்துகள்:

  1. கோப்பாய் கோட்டை பற்றி நன்றாகவே அறியத்தந்துள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  2. Ashok MA Mphil:- Super


    Kugananthaluxmy Ganesan :- வரலாற்றுத்துறையில் உயர்கல்வியாளர்கள் கவனத்தில்கொண்டு தொல்பொருள்ளாய்வாளர்கள் உதவியுடன் உண்மையான பெருமைகளை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்.
    பகிர்வுக்கு நன்றி சகோநரி.
    7-11-2019
    Vetha Langathilakam:- மகிழ்ச்சி சகோதரி 2017ம் ஆண்டு
    எழுதி அனுப்பிய கவிதை இன்று புத்தக உருவானது.
    லலீசன் சேர் க்கு த்தான் நன்றி.…எனது புத்தகத்திற்கும் முன்னுரை எழுதியவர்.
    7-11-2019
    Subajini Sriranjan :- சிறப்பான வரலாற்றுக் கவிதை
    7-11-2019
    Vetha Langathilakam :- மகிழ்ச்சி சகோதரி அன்புடன்
    7-11-2019

    பதிலளிநீக்கு
  3. Rathy Mohan நல்லாக இருக்கிறது வேதாமா
    7-11-2019


    Vetha Langathilakam :- Mkilchchy nanry Rathy..

    Jegatha Srikantharajah :- Thanks for sharing
    7-11-2019
    Vetha Langathilakam :- Happy......good....
    7-11-2019
    Sarvi Kathirithambi :- அருமை வேதா அக்கா
    7-11-2019
    Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன் மகிழ்வு சகோதரி.
    7-11-2019

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு