திங்கள், 4 மே, 2020

272. (835 ) - ஊடகம்.- கன்னல் சுவைத் தமிழ். + மின் கவி.






ஊடகம்.    சிவா கவிதைப் பெட்டகம் - மின்னிதழிலும் எனது கவிதைகள் இடம் பெற்றுள்ளது. இவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.







கன்னல் சுவைத் தமிழ். 

நாரால் இணைத்த மாலையாகவோ
வேரால் மதர்த்த பூவாகவோ
ஊரால் புகழும் தமிழ்
பாராளக் கூலி கேட்காதது.

அறிவுத் துணை அலங்காரம்
அதீதமானதல்ல சத்தியமானது.
அகத்தியமானது முத்திய உரைகளின்
தத்துவமே அற்புத வரலாறாகும்.

எண்ணத்தின் மகரந்தப் பொடி
திண்மையாக விதைப்பாகப் படிகிறது.
அண்ட கோளத்தில் தளிராகிறது.
இண்டு இடுக்குகளில் துளிர்க்கிறது.

முன்னம் செய்த தவமென்பேன்
முன்னோர் தந்த வரமென்பேன்
கன்னல் சேர்த்து இணைக்கின்ற 
கன்னித் தமிழே சுவையென்பேன்.

(அதிதமானது - எட்டாதது. 
அகத்தியமானது - கட்டாயம், அவசியமானது) )

april--2020


ஊர் சிறக்க ஊரடங்குச் சட்டம்.
யார்  அடங்குகிறார் 

பார் முழுதும் போர்வையானது  கொரோனா.





18 கருத்துகள்:

  1. Sivakumary Jeyasimman :- உண்மை அக்கா
    4-5-2020

    பதிலளிநீக்கு
  2. Ilaya Shahul :- அதீதம்---
    அதிகம்
    அகத்தியமானது---
    மனதிலானது
    என்பதல்லவா சரி?
    4-5-2020

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதீதம் - எட்டாதது. என்பதே சரி...
      அதிதம் - எட்டாதது என்பது பிழை. ( இங்கு தி னா.. தீ- யன்னாவாக வேண்டும்.
      கவனிப்புக்கு நன்றி...

      அகத்தியம் கருத்து சரியானதே..
      அதிதம் - என்ற சொற்பாவனையும் உள்ளது.
      கூகிளில் அதிதம் எழுதித் தேடினால் வருகிறது.
      ஆதிகால பாவனையிலும் சுலோகங்களில் அதிதம் உள்ளது சகோதரா.
      5 பக்கங்கள் வருகிறது முழுதும் வாசிக்கவும்.
      எனக்கு இப்படி ஆய்வது பிடிக்கும்.

      நீக்கு
    2. Ilaya Shahul:- Vetha Langathilakam
      ஓஓ இருக்கலாம்...
      தமிழென்பது கடல் மொழி
      அதில் ஆழம் அதிகம்
      5-5-2020

      நீக்கு
  3. வி.எம். சுப்பையா :- அருமை 👌..
    கவிதை தூறல்
    தொடரட்டும்...

    Love
    ·
    Vetha Langathilakam :அருமை .
    அன்புடன் மகிழ்ச்சி.
    நன்றி சகோதரா.

    பதிலளிநீக்கு
  4. Subi Narendran //கன்னல் சேர்த்து இணைக்கின்ற கன்னித் தமிழே சுவையென்பேன்// அழகான வரிகள். தமிழின் சுவை தனியே தெரிகிறது. வாழ்த்துக்கள்.
    4-5-2020
    Vetha Langathilakam :- கன்னல் போன்ற உங்களைப் போன்ற
    நட்புகளாலும் தமிழ் மேலும் இனிக்குமன்றோ சகோதரி.
    மகிழ்ச்சி
    4-5-2020

    பதிலளிநீக்கு

  5. சி வா :- கன்னல் சேர்த்து இணைக்கின்ற
    என் அன்னையின் தமிழ் இனிதென்பேன்...
    அருமை அருமை அம்மா..
    இனிய வணக்கமும் பிரியங்களும்..
    5-5-2020


    Vetha Langathilakam:- Samme இனிய வணக்கமும் பிரியங்களும்.. Siva,,

    பதிலளிநீக்கு
  6. Shanthy Bala :- முன்னம் செய்த
    தவமென்பேன்
    ....
    முன்னோர் தந்த
    வரமென்பேன்
    ....
    கன்னல் சேர்த்து
    இருக்கின்ற
    ....
    கன்னித் தமிழே
    சுவையென்பேன்.
    அழகான வரிகள்.
    வாழ்த்துக்கள் சகோதரி.
    5-5-2020
    Vetha Langathilakam:- கன்னல் போன்ற உங்களைப் போன்ற
    நட்புகளாலும் தமிழ் மேலும் இனிக்குமன்றோ சகோதரி.
    மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  7. Rathy Mohan :- அழகான தமிழில் வந்த வரிகள் அபாரம்
    5-5-2020
    Love
    Vetha Langathilakam :- பழகிப் பழகிப் பின்னிய தமிழ்
    வழமையென்றாலும் வசப்படும் தமிழ்
    விழலுக்கிறைத்த நீராகக் கூடாது
    நன்றி மகிழ்ச்சி ரதி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. Subajini Sriranjan :- அற்புதமான பா
      தமிழ் அழகுபடுத்தும் வேதாமாக்கு வாழ்த்துகள்
      5-5-2020

      நீக்கு
  8. Kugananthaluxmy Ganesan :- கன்னல் தமிழுக்கு அற்புதப் பாமாலை. அழகு .
    வாழ்த்துகள் சகோதரி.

    Love

    Vetha Langathilakam :- அன்னம் போல் வந்து தமிழ் பால் அருந்திய தங்களுக்கு
    அழகிய தமிழால் அருச்சனை செய்கிறேன்
    அன்புடன் வெகு நன்றிகள் சகோதரி
    மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. Kugananthaluxmy Ganesan Vetha Langathilakam
      மிக்க நன்றி தங்கள் அழகிய பதிலுக்கு.
      6-5-2020

      நீக்கு

  9. Jasmin Kennedy :- உங்கள் வரிகளும் கன்னலாய் இனிக்கிறது
    6-5-2020
    Love

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னம் போல் வந்து தமிழ் பால் அருந்திய தங்களுக்கு
      அழகிய தமிழால் அருச்சனை செய்கிறேன்
      அன்புடன் வெகு நன்றிகள் சகோதரி
      மகிழ்ச்சி

      நீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...