நடைபழகும் வண்டி
படுத்திருந்து விரல்கள் சூப்பிய பிள்ளை
அடுத்து காலுதைத்துக் கைகளாட்டி விரல்களைத்
தொடுத்து ஆராய்ந்து மெல்லப் பக்கம்
படுத்துப் புரண்டு கால்கள் இணைக்கும்
மெல்லத் தவழ்ந்து பிடித்து எழுந்து
வல்லமையாய்ச் சிற்றடியைக் கை பிடித்து
செல்லமாய்த் தொடர ஆதரவு தருவது
நல்ல ஒரு முச்சக்கர நடைவண்டி
நிதானமென்ற தடை தாண்ட ஆதரவும்
அவதானமாய்ப் பிள்ளை நடக்க வலுவானதும்
முச்சக்கர பிள்ளை நடைவண்டியாம்
அச்சங்க காலம் முதல் இருந்ததாம்
பழங்கால மரபு இந்த நடைவண்டி
புழங்குதலில் கேடுடைத்து நலீன சுழல் வண்டி
விழல் எழுதல் இயற்கையான படி
மழலைக்கு ஆரோக்கியம் வலிமைப்படி
இடுப்பு முதல் கால் தசைகள்
எடுப்பாய் வலுப்படும் இந்த நடைவண்டியால்
கொடுப்பனவு கை காலீறாக வலுப்படும்
தடுப்பின்றிக் காலூன்றத் தன்னம்பிக்கையும் உயரும்
பிள்ளை தானாகத் தனது அவயவங்களையும்
பிணைத்து நிதானத்தைக் கற்க உதவும்
இணையற்ற சாதனம் முச்சக்கர நடைவண்டி
துணையாகும் நடை பலமடையும் வண்டி.
4-3-2016
Sarala Vimalarajah
பதிலளிநீக்குஅழகு நம்ம காலத்தில் இதுதான் வண்டில் கவியும் அழகு
13.1-2021
Vetha Langathilakam
Sarala Vimalarajah
20-1-2021
Vetha Langathilakam
Pss Manian
👌 அருமை.
12-1-2021
13-1-2021
Vetha Langathilakam
Vetha Langathilakam
Author
Pss Manian .Anpudan .Makilchchy....
13-1-2021
Denmark Shan Subramaniam
சிறப்பு, வாழ்த்துகள்
13-1-2021
Vetha Langathilakam
Denmark Shan Subramaniam
20-1-2021
Subi Narendran
குழந்தை வளர்ச்சிக்கு அறிவூட்டும் கவிதை . அருமை.
13-1-2021
Vetha Langathilakam
Subi Narendran
May be an image of flower
20-1-2021
Manjula Kulendranathan
வாழ்த்துக்கள் அருமை
13-1-2021
Vetha Langathilakam
Manjula Kulendranathan
May be an image of night and fireworks
20-1-2021
Alvit Vasantharany Vincent
👏👏
13-1-2021
Vetha Langathilakam
Alvit Vasantharany Vincent
20-1-2021
Rathy Mohan
சிறப்பு
20-1-2021