இமைக்க மறந்த விழிகள்......
சமைக்க மறந்த வனிதையினைத் தீர்க்கமாய்
இமைக்க மறந்தான்இ புதினமாய் பார்த்தான்.
சுமையென எண்ணாமல் அவள் கர்ப்பமென்பதை
இமைக்க மறந்து விழிகளை விரித்தான்!
யார் தான் ரசிக்கார் மழலையை!
பார் அளக்க ஆரம்பிக்கும் முதலடியை
நீர் வழி கண்டு ஓடுவது போல:
தீர்க்கமான காலடி இமைக்க மறந்தோம்.
மீனாக நீந்தக் கற்றது போல
நாமாக எடுத்து ஊட்டாமல் உணவை
தானாக எடுத்துண்ணும் துருதுருப்பு
தேனாக இனிக்கிறது இமைக்க மறக்கிறேன்.
புலம் பெயர் இளையவர் திறமையின்
பலம் வியக்க வைக்கிறது. தமது
நலம் தேடும் சாதனை வழியின்
பலத்தில் நாமிமைக்க மறந்த விழிகளாய்!
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க் 13-3-2016
Rathy Mohan
பதிலளிநீக்குஇமைக்க மறந்தவிழிகள்... இதயத்தை தொட்டது..
· Reply · Share · 4y
Vetha Langathilakam
தங்கள் கருத்திடலிற்கு மிக நன்றியும் மகிழ்வும் உறவே.
2016
Balananthini Balasubramaniam
nice one
2016
Vetha Langathilakam
தங்கள் கருத்திடலிற்கு மிக நன்றியும் மகிழ்வும் உறவே.
2016