சனி, 23 ஜனவரி, 2021

331. (894) கறைபடியும் நட்பூக்கள்.

 




கறைபடியும் நட்பூக்கள்.


வாழ்வினிலே இனிதாம் நட்புப் பூக்கள்.

ஆழ்ந்து மனதில் மல்லிகை வாசமாய்

சூழ்ந்து கணங்களை உயிர்ப்பிக்கின்றன. அது

கவிழ்ந்திடில் கறை படியும் நட்பூக்களாகின்றது.


செதுக்கிய அழகுச் சிலையாகும் மனதில்

பதுக்கும் அமுத உயர் நட்பு.

மதுர மோகன முறுவலாக வானத்து

மீன்களாக ஜொலிக்கும் அற்புத நட்பு.


கைதவறி உடையும் கண்ணாடி போன்றது

மை சிந்திக் கறையாவது கூடாநட்பு.

தர்ம மனங்களின்றி அதர்ம மனங்களில்

நல்ல நட்பு நிர்வாணமாகிப் பல்லிளிக்கும்.


பொறுமை துருவ நட்சத்திரமானால் நட்பு

புன்னகை தேசமாகும். ஆத்திர அஸ்திரம்

மின்னலாய் வந்தால் நட்பெனும் பிரகாச

நிலவில் கருமேகம் பரவி இருட்டாகும்.


ஆரத்தியெடுக்கும் மேதகு நட்புகள் பட்டுக்

கம்பள வரவேற்புப் பெறும். ஆதரவாகப்

பேணாவிடில் சிலை மேல் விழுந்த

எச்சமாகிடும் உன்னத இன்ப நட்பு.


நம்பிக்கைத் துரோகங்கள் நங்கூரம் இட்டால்

நட்பு அலைந்து அல்லாடும். சூர்ப்பநகையின்

கூரிய நகங்களாய் ஆகவிடாது அன்பொளியால்

நட்பூக்களிற்கு நன்கு உரமிட வேண்டும்.


  3-8-2016







4 கருத்துகள்:

  1. கிருஷ்ணன்
    நம்பிக்கை துரோகங்கள் நங்கூரம் இட்டால் நட்பு அலைந்து அல்லாடும்..அருமை வரிகள் 2016
    பூக்காரி கவிதைகள்
    வாழ்த்துக்கள்
    2016•
    வேதா. இல
    சுக்தி கிழுஷ்ணன்10:- பூவின் ரசிகன்10 பூக்காரி கவிதைகள் மிக அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.
    2016 - பிரேம்குமார் பிரஜானா
    அருமை

    வேதா
    மிக நன்றி எல்லோர் வாழ்த்துரைகளுக்கும்.
    ஆனால் தேர்வாவதில்லை அது தான் சோகம்.
    2016 - சக்தி கிருஷ்ணா
    தேர்வாகும் நம்பிக்கையுடன் தொடருங்கள். மிக அருமையான கவிஞர் நீங்கள்

    பதிலளிநீக்கு
  2. Vetha Langathilakam
    23-1-2021
    May be an image of 1 person and text that says 'Gowry Sivapalan'
    24-1-2021
    Alvit Vasantharany Vincent
    சிறப்பு சகோதரி.
    24-1-2021
    Denmark Shan Subramaniam
    சிறப்பு, வாழ்த்துகள்
    ·24-1-2021
    Dilaksana Selvarasa
    சிறப்பு
    24-1-2021
    Manjula Kulendranathan
    வாழ்த்துக்கள் அருமை
    24-1-2021
    Vetha Langathilakam
    Paval Rajadurai
    அருமை,அழகு வாழ்த்துக்கள்.
    24-1-2021

    Vetha Langathilakam
    Paval Rajadurai all the best bro
    25-1-2021


    Sarala Vimalarajah
    சிறப்பு வாழ்த்துக்கள் அக்கா
    25-1-2021
    Vetha Langathilakam
    Anpudan Nanryjum....
    May be an image of text that says 'எல்லோருக்கும் இனிய வாழ் த்து கள். வேதா. இலங்கா. டென்மார்'
    25-1-2021
    Sasi Ravichandrarasa
    மிகவும் சிறப்பு 👌👌
    ·26-1-2021
    Rasamalar Jeyam
    கவிதை நன்று 👏
    27-1-2021
    photo thanks with flower

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு