ஞாயிறு, 30 மார்ச், 2025

460 (1003) படவரிகள் - 1 - ஏது சொல்ல! எப்படிச் சொல்ல!….

 

   படவரிகள் - 1

            



பட வரிகள் (போட்டோ பொயெம் - photo poem )
வலை ஒன்றில் - கவிதை பாருங்கள் என்ற தலைப்பில் 105 ஆக்கங்கள் உள்ளது.
வலை இரண்டில் - 91 ஆக்கங்கள் உள்ளது. - photo poem - என்ற தலைப்பில்
இது kovaikkothai. blogspot.com - ல் முதலாவதாக வலையேற்றுகிறேன்.
படவரிகள் தலைப்பில்.
00


படவரிகள் - 1
00


ஏது சொல்ல! எப்படிச் சொல்ல!….

காது குளிரப் பேசும் நண்பியிடம்
மாதுரி திருமண வாழ்வு சிறப்பா
ஆதுரமாக ஆவல் மீறக் கேட்டேன்.
ஈது பழைய கதை விவாகரத்தன்றோ
சாதுவானவர் திருமண வாழ்வு இப்படியாகிறது

ஏது சொல்ல எப்படிச் சொல்லவென்றாள்.

கேட்கும் கதைகளெல்லாம் இரு மனம்
ஓட்டாத கதைகள் திடுக்கிட வைக்கிறது.
பட்டும் படாத வாழ்வு முறையாக
கெட்டிமேளம் கொட்டிய வாழ்வு வெறும்
வெட்டிய பந்தலாவதால் நெஞ்சு பதைக்கும்
கட்டமாகிறது ஏது சொல்ல! எப்படிச் சொல்ல!


வேதா. இலங்காதிலகம். தென்மார்க். 30-4-2014.

publishing here today 30-3-2025





வியாழன், 27 மார்ச், 2025

459 (1003) கண்ணாடிச் சாடிக்குள்....

 


       


         



  கண்ணாடிச் சாடிக்குள்....


பெருங்கடல் தொலைத்த மீனாக

அருமைத் தாயகம் தொலைத்தோம்.

இருப்பு ஐரோப்பிய  மண்ணெனும்

பெருங்கண்ணாடிச் சாடிக்குள் நாம்.

வரும்  காலம் எப்படியோ!

00

குழலும் யாழும்   குரலோடிணைந்த

மழலை மொழியே மகத்தான  இன்பம்

வஞ்சகமற்ற இன்ப உலகம்.

பஞ்சுப் பொதியானபிஞ்சு முகமே

அஞ்சுகமே மானுட  அரிய பொக்கிசமே!

00

வேதங்கள் மனதில் வெகுவாக நிறைந்தால்

ஆதங்கம் அடங்கும் அமைதிப்

பாதங்களாகித் தேகம் சிலிர்க்கும்

போதுமானதாகச்  சலனமற்ற ஏரியாய்

போக்கிரித்தனமின்றி  வாழ்தல் சிறப்பு.

00

அன்பு  சாம்பிராணித் தூபமாய்

அகமெங்கும் மணக்கட்டும்! அதுவேயற்புதம்.!

ஆங்காரத் தினவெடுப்பு  உருகட்டும்.

ஓங்காரம் நிறை மனதே

பூங்காவாக்கும் மனித வாழ்வை.


கவிச்சிகரம் - வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 19-3-2023









ஞாயிறு, 23 மார்ச், 2025

458 (1002) ஆசீர்வாதம் சிறப்பான செல்வம் (மகிமையின் ஐசுவரியம்)

      


         


    



        



ஆசீர்வாதம் சிறப்பான செல்வம்
(மகிமையின் ஐசுவரியம்)

னது கவிதையை வாசிக்க முதல் இதை வாசியுங்கள்.
மார்கண்டேயனுக்கு 12 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும் அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும்.
ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு உபநயனம் செய்வித்த பின்னர், பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்று வருவாயாக' என்று பணித்தார்.
மார்கண்டேயனும் அதே போல தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான்.
சப்த ரிஷிகள் ஒருமுறை மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தபோது, மார்கண்டேயன் இவ்வாறு அவர்களிடம் வீழ்ந்து ஆசி பெற, அவர்களும், 'தீர்க்கா யுஷ்மான் பவ' என்று வாழ்த்திவிட்டார்கள்.
பிறகு தான் தெரிந்துகொள்கிறார்கள் அவனுக்கு 12 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று. என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா?
இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் கொண்டு செல்கிறார்கள். அவரிடமும் விழுந்து ஆசி பெறுகிறான் மார்கண்டேயன். அவரும் அதே போல ஆசி வழங்கிவிடுகிறார்.
இப்படி பார்க்கும் பெரிவர்கள் எல்லாம் அவனுக்கு ஆசி வழங்கவே அவர்கள் ஆசி அனைத்தும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது.
பெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமையல்லவா? ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் 16 அதாவது சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமும் தருகிறார்.
பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று. பகவான் கிருஷ்ணர் தம்மினும் பெரியோர்களை கண்டால் தவறாது விழுந்து வணங்குவார்.
எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும். அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல... உங்களது தலையெழுத்தையே மாற்றவல்லது.
எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும். அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல... உங்களது தலையெழுத்தையே மாற்றவல்லது.
(இணையத்திலிருந்து எடுத்தது)
00
எனது கவிதை -

மனப்பூர்வமான ஆசீர்வாதம் மாபெரும் சக்தி
தனம் நிறை மலர் மழை
மனிதனின் வயது ஏற ஏற
புனித ஆசி வாழ்த்திற்கு மதிப்பும்
கனதி பலம் சக்தியும் உண்டு.
தூண்டாமணி விளக்காகும் நல்லாசி (ஆசீர்வாதம்)
00
கால்களைத் தொடுதலால் புத்தி அறிவு
மேலான வலிமை புகழ் பெறலாம்.
தலையெழுத்தை மாற்றுமாம் பெரியவர் ஆசி
ஆசியின் பாதச்சுவட்டில் மலர்கள் மலரும்.
ஆசீர்வாதப் பூக்களின் தூவல் வாழ்வை
நேர்சீரான வானவில் நிறமாக்கும்.
00
ஆசீர்வாதம் பெறுதல் சிறந்த பண்பாகும்
தூசியாக இன்றிது ஆகியது சோகம்.
மோசமான உலகு நிலையே இது.
நேசிக்கும் பண்டைய வழக்குகள் காரணமின்றி
வீசுதல் முறையாமோ! நியாயாம் ஆகுமோ!
அருள்வாழ்த்து தலையெழுத்தையே மாற்றுமாம்.
00
கவி வித்தகர் - வேதா.இலங்காதிலகம் தென்மார்க்
23-3-2025





வெள்ளி, 21 மார்ச், 2025

457 (1001) ஏன்!..ஏன்...ஏன்....

 


           



                              



                                ஏன்!..ஏன்...ஏன்....


புழக்கம் (அறிமுகம்) ஆகும் இன்ப

மழலைப் பருவம் ஏன்

நிழலாக நிலைக்காது மறைகிறதே!

மழலைத் தோட்டமும் தானாக

மறையுமொரு சோகத் தீயோ!

மழவு எனும் இளமை

குமிழுகிறது ஆனந்தமாக!...பின்னும்

குழகுதலாகிறது (கொஞ்சி விளையாடுதல்) இரு பருவமும்

00

கழலுதலாகிறது இளமையும் ஏன்!

குழகமான (அழகு) வாலிப நிலை

கிழத்தனம் ஆவது ஏன்!

கிழமை (முதுமை) ஏன் வருகிறது!

மழவு (இளமை)பின்னோக்கி பயணிக்காதா!

சுழலும் சீவிதம் ஏன்!

உழலும் சோகம் ஏன்!

முழவு (மத்தளம்) ஆவதேன் வாழ்வு!

00

கழலாத கற்பாறைப் பாதையால்

சுழலும் வாழ்வை அலங்கரி!

பவளப்படுகை வாழ்வில் சிப்பிக்குள் முத்தாகு!


நிலாச்சுடர் - வேதா. இலங்காதிலகம்.  தென்மார்க் 29-9-2024







செவ்வாய், 18 மார்ச், 2025

456 (1000) சான்றிதழ்கள் கவிதைகள் - 3

 


          


                    நாற்பெருங்குழுமம் - கிராமியக் கவிதை....

00

'செங்காற்றில் அசைந்தாடும் செம்பருத்திப் பூவே'

00


செங்காற்றில் அசைந்தாடும் செம்பருத்திப் பூவே செங்கல்வராயனுக்குச் சமர்ப்பிக்க  செந்தளிப்பாயுனைக் கிள்ளுகிறேன்.

செம்புலமாம் நாட்டில் செங்கோல் தருவாயா!

செந்தில்வேலா!  செவிப்படுதலாம்  செய்திகள் இன்பமாயில்லையே!

செய்வினையாம் சுடுகலன்களால்  செலவாகிறது மன்னுயிர்கள்

செவ்வழி காட்டுவாயா!  செவ்விய வேண்டுதலுக்கு அருள்வாயா!

00

செவ்வந்தி உன்னைச் சேர்த்து எடுப்பாள்

பவ்வியமாய் உன்னைச் சுடுநீரில் போடுவாள்.

திவ்வியமான உனது செந்நீரின் சுகாதாரம்

அவ்வளவு சுகம் தரும் அறிவோமே!

அதிகாலையில் நீ மலரமுன்னே சிலர்

அவசரமாகத் திருடுவது மிக கவலை தருகிறதே!

00


கவிக்கனல்  வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 26-2-2025



                  



ஞாயிறு, 9 மார்ச், 2025

455 (999) சான்றிதழ்கள் கவிதைகள் ---2

 

           சான்றிதழ்கள் கவிதைகள்  ---2


          தமிழன்னை தமிழ்ச்சங்கம்

00
தலைப்பு - அன்னையே என் தமிழ்த்தாயே!

வள்ளுவர் கம்பர் பாரதி ஒளவை
அள்ளிப் பரப்பிய ஆதி மொழி
கள்ளெனும் திருக்குறள் எட்டுத்தோகை பத்துப்பாட்டு
கொள்ளையிடும் நாலடியார் பொக்கிசப் புதையல்
அள்ளி அணையுங்கள் தெள்ளிய தெய்வத்தமிழை
இவள் அன்னையே என் தமிழ்த்தாயே
00
மிரண்டிடாதீர்! தோன்றிய பிறப்பு குமரிக்கண்டம்.
முரணற்ற மணிமகுடம் சங்க இலக்கியங்கள்
திரண்ட இலக்கிய மரபுத் தேனாறு
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுக்கும் மேலானது
புரண்டு நீந்துங்கள் முவேந்தரும் தாலாட்டினர்
அரங்கேற்றுங்கள் கவலைகள் உங்களைத் தின்றிடாது!
00
கனல்கவி வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 4-3-2025














            

454 (998) பெண்கள் தினமடி!! 2025

 

பெண்கள் தினமடி!!

    எத்தனை கவிதைகள் எத்தனை இணையங்களில்

பெண்கள் தினத்தில் நினைவு படுத்துகிறேன்.
மகிழ்வாக உள்ளது.
வாழ்க பெண்கள்! இனிய பெண்கள் தினமடி!!!!!!
வேதா. இலங்காதிலகம். தென்மார்க் 8-3-2025





வெள்ளி, 7 மார்ச், 2025

453 (997) சான்றிதழ்கள் கவிதைகள் ---1 திறந்த மனது.

  

             வேதாவின் வலை - 1ல் பொதுவான சான்றிதழ்கள் தலைப்பில் - 11 ம்

வேதாவின் வலை -2ல்  - சான்றிதழ்கள் கவிதைகள் தலைப்பில்  160  மாக 

வலையேற்றியுள்ளேன் . 

 இனி 3வது வலையாக கோவைக்கோதை  .blogspot.com ல்  புதிதாக 1ல் இருந்து வலையேற்றுகிறேன். 

00 

சான்றிதழ்கள் கவிதைகள்  ---1



  

                  பாடும் மீன் -போட்டி இலக்கம் -122

00

திறந்த மனது.

00

கறந்த பால் போல்//

சிறந்த பண்பு நினைவால்//

திறந்த மனதால் நிம்மதியில்//

உறவாடிப் பறந்து வாழலாம்//

00

பிறந்த பிறப்பு உன்னதமாக//

இறந்த உண்மையால் அழுகும் //

அறம் துளிர்க்க வேண்டும்!//

குறளடி வாழ்வு சர்க்கரையாகும்//

00

நிறமுடை வாழ்வை ஆதரவுடன்//

சிறப்புற நாளும் எழுப்பு!//

திறப்பு எங்கும் இல்லை!//

பொறுப்புடை உன் மனதிலுண்டு!//

00

திறந்த மனதில் என்றும்//

பிறக்கும் தெளிந்த கண்ணோட்டம்//

துறக்க மாட்டான் புதுக்கருத்தாம்//

அறத்துறைச் சாதனைப் பாதையை! //

00

வேதா. இலங்காதிலகம். -தென்மார்க் 24-2-2025.





 


  

புதன், 5 மார்ச், 2025

452 (996) மௌன நாடகம்

 


              




   மௌன  நாடகம்


கவ்வி  முற்றாகக் பிடித்துச் சுடரெறியும்

00

பண்போடு விருப்பம்  அழுத்தாமலும்

பண்டிதர் மௌனித்து வாசிப்பார்.

சண்டியர் நினைவு மனதுள்

பண்டிதம் விடாது கருத்திட

கண்டதும் சிரித்துக் கையசைப்பார்

00

பண்டாரி அப்பு தவறாமல்

பண்டு முறைப்படி வாழ்த்திடுவார்.

பண்ணமைத்தும் மகிழ்வு பதிவார்.

உண்மையில் மலிவுப் பதிப்பாளரல்லர்.

பண்புடையார் போலவர் உறவு.

00

எங்கு மனம் அன்பால் தோய்கிறதோ

அங்கு சண்டித்தனம் துளியுமணையாது

பொங்கும் அன்பணைப்பு மலர்ந்து விரியும்.

தங்காது முரண்பாடு தவிடுபொடியாகும்

ஏங்காது இணக்கமுடைய மனது

00

கவிநட்சத்திரம் - வேதா. இலங்காதிலகம் -  தென்மார்க் -   5 -3- 2025



   



செவ்வாய், 4 மார்ச், 2025

451 (995) எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே.

 



         


       

Just now 
Shared with Public
Public
தமிழ்த்தென்றல்
பூமதீன் கலந்தர் · April 26, 2017 ·
வேதா . இலங்காதிலகம் டென்மார்க்

00
புதுக் கவிதை தலைப்பு:- எந்த நிலை வந்தாலும்
வந்த நிலை மறவாதே.
சொந்த நிலை மறந்து புதிதாய்
வந்த நிலையால் தலைப்பாரம் ஏறி
மந்தபுத்தி மகாகர்வியாகவும் மாறி ஒரு
விந்தை நிலைக்குச் செல்வார் சிலர்.
நிறைகுடம் தளும்பாது என்பார் ஒரு
குறைகுடம் தளும்பும் என்பது வழக்கு
குணத்தில் பொறுமை தரும நெறியுடையார்
கணமேனும் மாறார் நிதான நிலையுடையார்.
எதை நாம் கொண்டு வந்தோம்
அதை இங்கு நாம் இழப்பதற்கென்பது
கீதாச்சாரம். அனைத்தும் மறந்து உணராமையால்
வதைபடுகிறோம் இவ்வுலகில் என்றும் நாம்.
சோகங்களால் அழுந்தப் புதைந்து வருந்தி
பாகமான மகிழ்வை இழந்து புலம்புகிறோம்.
தாகமாய் அறிவைப் பெற்றும் நன்மையாக
பாகம் பிரித்துப் பயனடைய மறக்கிறோம்.
புகழ் வந்திடினும் நம்மைப் பிறர்
இகழ் நிலை கொள்ளாது அடக்கம்
அகழ்ந்து புதைக்காது பிறர் மதிக்கத்
திகழ்ந்திடுதல் நானிலம் போற்றும் நற்பண்பாகும்.
மனம் உறுதியானால் வெற்றியும் தோல்வியும்
கனதியான மாற்றங்களை எம்முள் ஏற்படுத்தாது.
தினமும் எந்த நிலை வந்தாலும்
சினமின்றி வந்த நிலை மறவாதிருப்போம்.
போதுமெனும் மனநிலையும் எந்த நிலை
வந்தாலும் எமது வந்த நிலை
மாற்றாது. அளவோடு இதயம் நிறைவாக்கும்
நல்ல பல அடிப்படைகள் மனிதமுடையன





494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...