கண்ணாடிச் சாடிக்குள்....
பெருங்கடல் தொலைத்த மீனாக
அருமைத் தாயகம் தொலைத்தோம்.
இருப்பு ஐரோப்பிய மண்ணெனும்
பெருங்கண்ணாடிச் சாடிக்குள் நாம்.
வரும் காலம் எப்படியோ!
00
குழலும் யாழும் குரலோடிணைந்த
மழலை மொழியே மகத்தான இன்பம்
வஞ்சகமற்ற இன்ப உலகம்.
பஞ்சுப் பொதியானபிஞ்சு முகமே
அஞ்சுகமே மானுட அரிய பொக்கிசமே!
00
வேதங்கள் மனதில் வெகுவாக நிறைந்தால்
ஆதங்கம் அடங்கும் அமைதிப்
பாதங்களாகித் தேகம் சிலிர்க்கும்
போதுமானதாகச் சலனமற்ற ஏரியாய்
போக்கிரித்தனமின்றி வாழ்தல் சிறப்பு.
00
அன்பு சாம்பிராணித் தூபமாய்
அகமெங்கும் மணக்கட்டும்! அதுவேயற்புதம்.!
ஆங்காரத் தினவெடுப்பு உருகட்டும்.
ஓங்காரம் நிறை மனதே
பூங்காவாக்கும் மனித வாழ்வை.
கவிச்சிகரம் - வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 19-3-2023
Janaki Sreenivasulu
பதிலளிநீக்குflower wish 28-3-2025
Leela Nagamani
flower wish 28-3-2025