மௌன நாடகம்
கவ்வி முற்றாகக் பிடித்துச் சுடரெறியும்
00
பண்போடு விருப்பம் அழுத்தாமலும்
பண்டிதர் மௌனித்து வாசிப்பார்.
சண்டியர் நினைவு மனதுள்
பண்டிதம் விடாது கருத்திட
கண்டதும் சிரித்துக் கையசைப்பார்
00
பண்டாரி அப்பு தவறாமல்
பண்டு முறைப்படி வாழ்த்திடுவார்.
பண்ணமைத்தும் மகிழ்வு பதிவார்.
உண்மையில் மலிவுப் பதிப்பாளரல்லர்.
பண்புடையார் போலவர் உறவு.
00
எங்கு மனம் அன்பால் தோய்கிறதோ
அங்கு சண்டித்தனம் துளியுமணையாது
பொங்கும் அன்பணைப்பு மலர்ந்து விரியும்.
தங்காது முரண்பாடு தவிடுபொடியாகும்
ஏங்காது இணக்கமுடைய மனது
00
கவிநட்சத்திரம் - வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 5 -3- 2025
Sarala Vimalarajah
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள் அக்கா
3d
Reply
Sujatha Anton
எங்கு மனம் அன்பால் தோய்கிறதோ
அங்கு சண்டித்தனம் துளியுமணையாது
பொங்கும் அன்பணைப்பு மலர்ந்து விரியும்.
தங்காது முரண்பாடு தவிடுபொடியாகும்
ஏங்காது இணக்கமுடைய மனது
3d
Reply
Sujatha Anton
அழகு தமிழ் வரிகள். ""கவிதாயினி வேதா""
3d
Reply